ஹவாலா பணம் கடத்தல் பற்றி பத்திரிகை, டிவியில் கேள்விப்பட்டு இருப்போம் அதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
ஹவாலா என்ற அரபு சொல்லுக்கு பரிவர்த்தனை என்று பொருள். இதற்கு சரியான தமிழ் சொல் இல்லாத காரணத்தால் முறைகேடான வெளிநாட்டு பணபரிமற்றம் என்று சொல்லலாம்.
ஹவாலா பண பரிமாற்றம் என்பது பல நாடுகளுக்கு இடையே நடக்கும் சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் ஆகும். இந்த பணபரிமாற்றம் ஹவாலா முகவர்கள் மூலம் நடைபெறுகிறது. ஹவாலா பணபரிமாற்றத்தில் ஈடுபடுவோரை ஹவால்தாரர்கள் என்று அழைப்பர். ஒரு பணபரிவர்த்தனைக்கு 2 ஹவால்தார்கள் இருப்பார்கள். ஒருவர் உள்நாட்டிலும், மற்றொருவர் வெளிநாட்டிலும் இருப்போர். இந்த இரண்டு பேருக்கும் இடையே பரஸ்பரம் ஒரு ஒப்பந்தம் இருக்கும்.
ஒருவர் ஹவாலாதரரிடம் பணம் கொடுக்கும்பொழுது ஒரு Password தருவார். அந்த ஹவாலாதாரர் மற்றொரு நாட்டில் இருக்கும் தனது ஏஜென்டிடம் தான் கொடுத்த Password டை உடனே தெரிவிப்பர். இந்த Password டை கூறும் நபரிடம் பணம் கொடுக்கப்படும்.
வங்கிகள் மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் பொழுது அதிகளவு வரி செலுத்தவேண்டி இருப்பதாலும், வங்கிகள் அதிகமான ஆவணங்கள் கேட்பதலும் இந்த முறையை சிலர் பணம் தேர்வு செய்கின்றனர். வளைகுடாநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வீட்டுக்கு பணம் அனுப்ப, இந்த முறையை தேர்வு செய்கின்றனர். தீவிரவாதிகள், அரசியல்வாதிகள் இந்த ஹவாலா முறையில் பணம் அனுப்புகின்றனர். கணக்கில் வராமல் பணம் அனுப்ப இந்த முறையை பலரும் பின்பற்றுகின்றனர். ஸ்விஸ் பேங்கில் இருக்கும் கருப்பு பணம்கூட ஹவாலா முறையில் பரிவர்த்தனை செய்யப்பட்டு அந்த வங்கியில் போடப்பட்டுள்ளது. நம்நாட்டுக்கு வரவேண்டியாய் நம்முடைய வரி பணம் கருப்பு பணமாக மாறி, ஹவாலா முறையில் மாற்றப்பட்டு உலகம் முழவதும் பரவுகிறது.
ஹவாலா பணபரிமாற்றத்தில் குறைவான கமிஷன், விரைவாக பணம் அனுப்பும் வசதி, நம்பகத்தன்மை, எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அனுப்பலாம் என்பதால் பலரும் முறையற்ற இந்த வழியை தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் சுமார் 4000 ஹவால்தாரர்கள் உள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதில் 80% ஹவாலாதாரர்கள் மும்பையில் உள்ளனர்.