Editor's Picksஅரசியல்உலகம்

பிரிட்டன் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி

ஆட்சியை இழந்த ரிஷி சுனக்கின் கட்சி

சமீபத்தில் நடந்த பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 650 இடங்களில் 410 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ரிஷி சுனக்கின் பழைமைவாத கட்சி 119 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை இழந்துள்ளது. இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியான உமா குமரன் லண்டன் ஸ்டார்ட்போர்ட் தொகுதியில் போட்டியிட்டார்.

ஈழத் தமிழ் பெண் உமா குமரன் வெற்றி

முடிவில் 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் உமா குமரன். அவரை எதிர்த்து போட்டியிட்ட பழைமைவாத கட்சியின் வேட்பாளர் கேன் பிளாக்வேல் 3,144 வாக்குகள் மட்டும் பெற்று நான்காம் இடம் பெற்றார். ஈழத் தமிழ் பெண்ணான இவர், பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் எம்பி ஆவார். இவரின் பெற்றோர் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போருக்கு பின், இங்கிலாந்தில் குடிபெயர்ந்தனர்.

லண்டனில் பிறந்த வளர்ந்த இவர், அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின் 2020 ல் கெய்ர் ஸ்டார்மாரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை பணியாற்றினார். அதன் பின் C40 Ciites Climate Leadership Group இன் இணை தலைவர்கள் சார்பாக இராஜேந்திர, சர்வதேச உறவுகளின் இயக்குனர் ஆனார். இவர் தொழிலாளர் காலநிலை மற்றும் சுற்றுசூழல் மன்றத்தின் ஆலோசனை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

உங்கள் பிரதிநிதியாக இருப்பேன்

இந்த வெற்றியை குறித்து அவர் தன் X பக்கத்தில், ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வாழ்க்கையின் பெருமை. என் மீதும், தொழிலாளர் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. நான் எப்போதும் உங்கள் குரலாகவும் உங்கள் பிரதிநிதியாகவும் இருப்பேன். நான் எப்போதும் உங்களை வீழ விட மாட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

8 தமிழர்கள் போட்டி

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கிலாந்து தேர்தலில் போட்டியிடும் நிலையில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 8 பேரும் களம் கண்டுள்ளனர். குறிப்பாக உமா குமரனையும் சேர்த்து மயூரன் செந்தில்நாதன், கவின் ஹரன், கமலா குகன், நரணி ருத்ரா ராஜன், கிருஷ்ணி, டெவின் பால், ஜாஹீர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் பிரிட்டன் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.