Editor's Picksஅரசியல்

ஜெயலலிதா சட்டசபையிலேயே “நான் ஒரு பாப்பாத்தி” என பேசினார் உமா ஆனந்த் பரபரப்பு பேட்டி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஜெயலலிதா இந்துத்துவ தலைவர், அவர் விட்டுச் சென்ற இடத்தைப் பாஜக நிரப்பி வருகிறோம்” என பேசியுள்ளார். இது குறித்து அதிமுக, பாஜக தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பேசு தமிழா பேசு யூடியூப் சேனலில் பேசிய பாஜகவை சேர்ந்த சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் அவர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார் அது குறித்து காணலாம்.

நான் ஒரு பாப்பாத்தி – ஜெயலலிதா:

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் அம்மையார் ஜெயலலிதா குறித்து உமா ஆனந்த் பல தகவல்களை கூறியுள்ளார். அதில் ஜெயலலிதா அவர்கள் “இந்து மத நம்பிக்கையை வெளிப்படையாக பல இடங்களில் கூறியுள்ளார். குறிப்பாக அவருடைய மத நம்பிக்கையை யாருக்காகவும் எங்கும் விட்டு கொடுத்தது இல்லை, அவர் மாபெரும் ஒரு சக்தியாக இருப்பதால் சட்ட சபையிலே ‘நான் ஒரு பாப்பாத்தி’ என்று ஜெயலலிதா அவர்கள் பேசினார். இன்றைக்கு பேசும் வீரமணி அவர்கள் அன்று எதுவும் கூறமால் அமைதி காத்து வந்தார்” என தொடர்ந்து பேசினார்.

ஓட்டுக்காக விபூதி இடுவது:

“எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாஜக கூட்டணியில் இருந்த போது விபூதி இட்டு கோவில் கோவிலாக வலம் வந்தார். இன்றைக்கு அவர்கள் முஸ்லீம் மக்களின் ஓட்டுக்காக விபூதி இடுவதை மறந்திருக்கலாம் ஆனால், ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இதுபோல என்றைக்கும் மறந்ததும் இல்லை எதற்காவும் தன்னை மாற்றி கொள்ளவும் இல்லை”

இந்துத்துவ தடை சட்டம்:

தொடர்ந்து கேள்வி கேட்ட நெறியாளர், “எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை பொதுவான தலைவர்களாக மக்களிடம் கொண்டு செல்லும் போது இந்துத்வா என்ற அடிப்படையில் சுருக்குவதாக தற்போதைய அதிமுக தலைவர்கள் குற்றம் சாற்றுகிறார்கள்” என்று கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த உமா ஆனந்த், “இப்போது இருக்கும் அதிமுக தலைவர்களுக்கு எம்ஜிஆர் போல பேச தகுதியில்லை. குறிப்பாக எட்டிப்பாடி அவர்களால் எம்ஜிஆராகவோ, ஜெயலலிதாகவே மாற முடியாது. இந்துத்துவ தடை சட்டம் வந்த போது அதை எதிர்த்தவர் எம்ஜிஆர், எப்படி முஸ்லீம்களுக்கு முஸ்லீம் லீக் இருக்கிறதோ அதே போல் இந்துக்களுக்கு இந்து முன்னணி இருப்பதில் எந்த தவறும் இல்லை என கூறியவர் எம்ஜிஆர். மேலும், அவர்களை மக்கள் பொதுவான தலைவர்களாக தான் பார்க்கின்றனர்” என பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் அளித்த முழு வீடியோவை இங்கு காணலாம்.

Related posts