உணவு

சிறந்த 12 சமையல் டிப்ஸ்… இதை டிரை பண்ணி பாருங்க..!

குடும்பத்தில் முக்கியமான சில விஷயங்களில் சமையல் ஒரு உன்னதனமான செயல். உணவை சுவையுடன் சமைப்பதோடு மட்டும் அல்லாமல் நேர்த்தியாகவும் சமைப்பது அவசியம். அப்படி சமையலறையை கலக்குவதற்கான சில குறிப்புகளை இங்கு பகிரப்பட்டுள்ளது.

1. அவியல் செய்யும்போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றுடன் சிறிது ஊறவைத்த கச கசாவைச் சேர்த்து அரைத்தால் அவியல் திக்காகவும், சுவையாகவும் இருக்கும்.

2. வாழைத்தண்டு கூட்டுப் பொரியல் செய்யும் போது அத்துடன் சிறிது முருங்கைக் கீரையையும் சேர்த்து செய்தால் சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்.

3. வாணலியில் ஒரு பிடி முருங்கைக் கீரையை நெய் விட்டு வதக்கி, சிறிது தேங்காய் சேர்த்து அரைத்துக் கொதிக்கும் சாம்பாரில் விட்டால் சுவை சூப்பராக இருக்கும்.

4. அவல் உப்புமா செய்யும்போது பயத்தம் பருப்பை நெத்துப்பதமாக வேக வைத்துச் சேர்த்து கலந்து செய்ய சுவை அதிகமாக இருக்கும்.

5. பாயாசத்தில் திராட்சைக்குப் பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

6. தோசை மாவு, பொங்கல் போன்றவற்றில் சீரகத்தைக் கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும்.

7. பாகற்காயுடன் உப்பு, மஞ்சள் தூள், வெல்லம், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும்.

8. இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு தேக்கரண்டி மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லிப் பொடி வாசனையாக இருக்கும்.

9. உருளைக்கிழங்கு வேக வைக்கும்போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

10. தக்காளி குருமா செய்யும்போது சிறிது வெங்காயத்தைப் பச்சையாக அரைத்து ஊற்றவும். குருமா வாசனையுடன் சுவையாக இருக்கும்.

11. பிரியாணி செய்யும் போது சிறிது தயிர் சேர்த்து கொண்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

12 . அதிரசம் செய்யும் போது ஏலக்காயுடன் சிறிது சுக்கு சேர்த்து கொண்டால் உடலுக்கும் நல்லது, சுவையும் கூடும்.

இந்த டிப்ஸை எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க…

Related posts