சமூகம்தமிழ்நாடு

எல்லை மீறி கேள்வி கேட்ட யூடியூப்பர் – எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

‘உங்களுக்கு 10 கல்யாணம் பண்ணிக்க ஆசை இல்லையா’, ‘கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ணுவீங்க’, ‘உங்களுக்கு இளமையான பெண் பிடிக்குமா இல்லை ஆண்டிதான் பிடிக்குமா’, இப்படி ஆபாசமான கேள்விகளை கேட்டு பிரபலமான யூடியூப் சேனல்தான் வீரா டாக் டபுள் எக்ஸ், பெரும்பாலும் பெண் தொகுப்பாளினிகளை வைத்து ஆபாசமான கேள்விகளையும், ரசக்குறைவான சந்தேகங்களையும் இளைஞர்களிடம் கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ள இந்த சேனலுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

இளம்பெண் தற்கொலை முயற்சி

இந்த நிலையில் வீரா டாக்ஸ் சேனலில் கேட்கப்பட்ட ஒரு ஆபாசமான வீடியோவால் ஒரு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. வீரா டாக் டபுள் எக்ஸ் சேனலில் பணியாற்றி வருபவர் VJ ஸ்வேதா இவர் எக்குத்தப்பான கேள்விகளை கேட்பதற்கு பெயர் போனவர். இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகர் பகுதியில் சாலையில் செல்லும் இளைஞர் மற்றும் இளம் பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளார் . அப்போது ஒரு இளம் பெண்ணிடம் அவரது காதல் குறித்து ஒரு சில கேள்விகளை கேட்டுள்ளார், அதன் பிறகு ஒரு ஆபாசமாக கேள்வியை கேட்டுள்ளார் . இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது வீடியோவை யூடியூப் மற்றும் சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்யக் கூடாது என கூறியுள்ளார்.

ஆனால் இந்த பேட்டியை வீரா டாக் டபுள் எக்ஸ் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். அதன்பிறகு இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தான் அளித்த பேட்டியை தனது அண்ணன் மற்றும் உறவினர்களுக்கு பார்த்தால் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் எலி மருந்தை வாங்கி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கீழ்பாக்கம் போலீசார் ராம், யோகராஜ், YouTube VJ ஸ்வேதா, ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சேனலில் பதிவாகியுள்ள வீடியோக்களில் நீங்கள் விரைவில் சிறைக்கு செல்லப்பௌவது உறுதி என்றே பலரும் கமெண்ட் செய்து வந்தனர். ஆனால் அதை கண்டு கொள்ளாத வீரா டாக் டபுள் எக்ஸ் சேனல் தொடர்ந்து ஆபாச நோக்கிலேயே செயல்பட்டு வந்தது. தற்போது கமெண்ட் செய்தவர்களின் கணிப்பு பலித்து விட்டது.

Related posts