சினிமா ரசிகர்களால் தளபதி என்று செல்லமாக அழைக்கபடும் நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் திரையுலகில் அவர் கடந்துவந்த பாதையை இந்த வீடியோவில் பார்க்கலாம். திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கும் சோபா அவர்களுக்கும் மகனாக 1974 ஜுன் 22ல் பிறந்தவர் தான் ஜோசப் விஜய் சந்திரசேகர். சிறுவயதில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் விஜய் ,தங்கையின் இறப்பிற்கு பின் விஜய் சோகத்தில் ஆழ்ந்து விட்டார். தனது மகனை அந்த துயரமான சம்பவத்தில் இருந்து மீட்டுக் கொண்டுவர வேண்டுமென்று எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய படத்திலேயே விஜயை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைக்கிறார். சினிமா பயணத்தை விஜய் வெற்றி என்ற திரைப்படத்தில் இருந்து தொடங்குகிறார். இந்த படத்தில் நடித்து 500 ரூபாய் சம்பளமும் பெறுகிறார். இதனை தொடர்ந்து குடும்பம், நான் சிவப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு இருட்டறை, இது எங்கள் நீதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்தார் விஜய். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்த விஜய்க்கு ஒரு பெரிய ஹீரோவாக வேண்டும் என்னும் ஆசை வந்தது. அந்த ஆசையை தன்னோட ஆசையான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சொல்கிறார் விஜய், அதற்கு அவரது தந்தை சினிமாவில் ஹீரோ ஆகுவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஆனால், நீ சொல்கின்ற ஆர்வத்தையும் உன் மேல் இருக்கும் நம்பிக்கையும் வைத்து, நான், உனக்கு நிச்சயமாக வாய்ப்பு தருகிறேன் என்கிறார். விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்க்கு வாய்ப்பு தருகிறேன் என்று முதலில் எடுக்கப்பட்ட படம் தான் நாளைய தீர்ப்பு ஆனால் இந்த திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை, அதன் பிறகு அவர் நடித்த சில படங்களும் ஹிட் ஆகவில்லை, அதை அடுத்து கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தம்பியாக விஜய் நடித்த செந்தூரபாண்டி படம் விஜயின் திரையுலக வாழ்க்கையையே மாற்றியது. அதன் பிறகு அவர் நடித்த அனைத்து படங்களான பூவே உனக்காக,லவ் டுடே, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்கள் அன்றைய இளசுகள் மத்தியில் விஜயை காதல் நாயகனாக மாற்றியது .கில்லி, போக்கிரி என அடுத்தடுத்த படங்களில் ஆக்சனில் கலக்கிய விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களும் அட்லி இயக்கத்தில் நடித்த தெறி , மெர்சல் உள்ளிட்ட படங்கள் நடிகர் விஜய்யால் தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக மாற்றியது. இன்று தமிழகத்தை கடந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா என இந்தியா முழுக்க தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தளபதி விஜய் தன்னுடைய அரசியல் வருகையை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். சினிமாவில் வெற்றி பெற்ற அவர் அரசியலிலும் வெற்றி பெறுவாரா என பொறுத்து இருந்து பார்க்கலாம்.