வெள்ள நிவாரண தொகை உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் தமிழகத்தை தவிர எல்லா மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது : தொடர்ந்து தமிழகம் பல்வேறு விசயங்களில் வஞ்சிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனிமொழி எம்பி தெரிவித்தார்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு முதல் முறையாக தூத்துக்குடி வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 50 லட்சம் செலவில் பல்வேறு வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட பொதுமக்களின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கை இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 19 பேருக்கு இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டினார். பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடிகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவ – மாணவிகளை இன்று சந்தித்துள்ளேன். அமைச்சர் கீதா ஜீவன் அவர்களும் பேசி, இது குறித்து முதலமைச்சரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
நீட் தேர்வு என்பது ஒன்று ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்று என்றார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நீட் தேர்வு குளறுபடி சம்பந்தமாக மாணவர்கள், பெற்றோர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் வழி வகைவகை செய்யப்படும் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் என தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின்பு வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் தெரிவித்தீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இனிமேல் தான் அந்த வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் மறுபடியும் பரிசீலனை செய்து அனைவருக்கும் வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி குறைவாக மத்திய அரசு வழங்கி உள்ளனர் மற்ற மாநிலங்களுக்கு அதிகமாக வழங்கி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இது குறித்து துறை அமைச்சரிடமும் பிரதமரிடமும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி கோரிக்கை வைப்போம், தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. பலமுறை தமிழ்நாட்டிற்கு பிரதமர் வாக்குகள் சேகரிக்க வந்துள்ளார். நமது கோரிக்கையை கேட்க மாட்டேன் என்கிறார். அதுதான் வருத்தமான விஷயமாக உள்ளது. இதற்கு நான் என்ன சொல்ல முடியும் அவர்கள் ஆட்சி செய்கின்ற மாநிலத்திற்கு அதிகமான நிதி உதவுவதும் ஜிஎஸ்டியில் நமக்கு வர வேண்டிய நிலுவை தொகையும் வெள்ள நிவாரண தொகையும் தரவில்லை மற்ற மாநிலங்களுக்கு நிவாரணத் தொகையும் வரவேண்டிய நிலுவை தொகையும் விரைந்து வழங்கப்படுகிறது தமிழ்நாட்டிற்கு மட்டும் வரவேண்டிய எந்த பணமும் வந்து சேர்வதில்லை வெல்ல பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறோம் முதலமைச்சர் கேட்ட எந்தவித நிவாரணத் தொகையும் மத்திய அரசு தரப்படவில்லை இதை எப்படி நாம் பார்க்க முடியும் என்றார்.
தனிப் பெரும்பான்மை பெறாமல் பாஜக ஆட்சி அமைத்திருப்பது என்பது ஒராண்டு கூட நிலைக்காது என்று சுப்பிரமணியசுவாமி கூறி இருப்பது குறித்து பேசிய அவர் முதன்முறையாக சுப்பிரமணியசுவாமி நல்ல விசயத்தை கூறியுள்ளார் அவருடைய ஆசை நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றார்.