விளையாட்டு

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்..!

ஐபிஎல் முடிந்த நிலையில், கிரிக்கெட் பிரியர்களுக்கு விருந்தாக ஜூன் 1 ஆம் தேதி ஆண்களுக்கான டி20 உலக கோப்பை துவங்க உள்ளது. ஜூன் 1 ஆம் தேதி துவங்கும் போட்டிகள் ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகளை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்துகின்றன. இம்முறை 20 அணிகளைக் கொண்ட மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியாக நடைபெற இருக்கிறது.

இருபது அணிகளும் ஐந்து பேர் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் A: கனடா, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா

குரூப் B: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து

குரூப் C: ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உகாண்டா, மேற்கிந்திய தீவுகள்

குரூப் D: வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை

ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையின் முதல் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 18ஆம் தேதி வரை நடக்கும் போட்டிகள் குரூப் ஸ்டேஜாக நடக்க இருக்கிறது. இரண்டாம் கட்டமாக, சூப்பர் 8 போட்டி ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை நடைபெறும். அரையிறுதிப் போட்டிகள் 27ஆம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இந்திய அணி பங்குபெறும் போட்டிகள்:

இந்தியா vs அயர்லாந்து – ஜூன் 5 புதன், இரவு 7.30 மணி, இடம் – நியூயார்க்
இந்தியா vs பாகிஸ்தான் – ஜூன் 9, ஞாயிறு, இரவு 8.00 மணி, இடம் – நியூயார்க்
அமெரிக்கா vs இந்தியா – ஜூன் 12, புதன், இரவு 8.00 மணி, இடம் – நியூயார்க்
இந்தியா vs கனடா – ஜூன் 15, ஞாயிறு, இரவு 8.00 மணி, இடம் – லாடர்ஹில்

அடுத்த ஒரு மாதத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பொழுது போக்குவதற்கு இந்த போட்டிகள் ஏதுவாக இருக்கும், அதே போல எல்லா அணிகளும் கோப்பையை வெல்லும் நோக்குடன் முழு பலத்துடன் மோதும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related posts