வங்காள தேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள்- 405 இந்தியர்கள் நாடு திரும்பினர்
வங்காள தேசத்தில் போராட்டம் தீவிரம் அடைந்ததால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்காளதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இடைக்கால அரசு அமைக்க முயற்சி நடந்து வருகிறது. வங்காளதேசம் நிலவரம் காரணமாக, கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில், ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் வங்காளதேசத்துக்கு விமான சேவையை ரத்து செய்தன. இருப்பினும், அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீது அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் சிறப்பு விமானங்களை இயக்கின.
ஏர் இந்தியா சிறப்பு விமானம், நேற்று முன்தினம் இரவு, டெல்லியில் இருந்து பயணிகள் யாரும் இல்லாமல் காலியாக புறப்பட்டது. நேற்று காலை, டாக்காவில் இருந்து 205 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு டெல்லி வந்து சேர்ந்தது. அவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர். இதுபோல், இண்டிகோ சிறப்பு விமானம், நேற்று முன்தினம் டாக்கா சென்றது. அங்கிருந்து 2000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை ஏற்றிக்கொண்டு, மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தது. இத்தகவலை இண்டிகோ விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 2 விமானங்களிலும் மொத்தம் 405 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர்