இந்தியாவிளையாட்டு

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நாடு திரும்பினார்

டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்றார். அதன் பிறகு அவர் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலம் வென்றார். இதன் மூலம் சுதந்திரத்துக்கு பிறகு ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அவரது 3 வது பதக்கம் வெல்லும் முயற்சி மயிரிழையில் நழுவிப்போனது அவர் 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் 4 வது இடம் பெற்றார்.

இந்த நிலையில் 2 பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த அரியானாவை சேர்ந்த 22 வது மனு பாக்கர் நேற்று நாடு திரும்பினார். அவர் பாரீசில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் காலை 9.20 மணிக்கு டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லேசான மழைக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்து மேளதாளம் முழங்க அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவருடன் பயிற்சியாளர் ஐஸ்பால் ராணாவும் வந்தார்.

பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும் அவர்களுக்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மனுபாக்கரின் பெற்றோர் ராம் கிஷன், சுமிதா, ஜஸ்பால் ராணாவின் தந்தை நாராயண் சிங் ராணா மற்றும் அரியானா, உத்தரகாண்ட் மாநில துப்பாக்கி சுடுதல் சங்க நிர்வாகிகள் ஆகியோரும் அவர்களை வரவேற்றனர்.

பின்னர் மனு பாக்கர், மத்திய விளையாட்டு துரை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்திப்பதுடன், பாராட்டு விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் உடல் எடை அதிகம் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரச்சனையால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது

ஒலிம்பிக் நிறைவு விழாவில் மனுபாக்கர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். இதற்காக அவர் வருகிற சனிக்கிழமை பிரான்சுக்கு புறப்பட்டு செல்கிறார்.

Related posts