அரசியல்

வெற்றி பெற்ற அணி வெற்றியை கொண்டாட வேண்டுமா அல்லது தோல்வி அடைந்த அணி கொண்டாட வேண்டுமா?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது.

பாஜக தனிப்பெரும் அதிக எண்ணிக்கை உறுப்பினர்களை கொண்ட கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியினருடன் இணைந்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. மக்களும் இண்டி கூட்டணியை பின்னுக்குத் தள்ளி ஆட்சி அதிகாரத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிருக்கு அளித்துள்ளனர்.

இப்படியிருக்கையில், இண்டி கூட்டணி தோல்வியை கெளரவமான முறையில் ஏற்றுக் கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராகுவதை விட்டு விட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் போன்றோர் தங்கள் கூட்டணி வெற்றி பெற்றது போல் மமதையுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ராகுல் தங்கள் கூட்டணியின் கருணையினால் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது என ஏளனத்ததுடன் உளறி வருகிறார்.

ராகுல் அவர்களே.. யதார்த்தை சற்றே புரிந்து கொள்ளுங்கள்.

பாஜக மட்டும் 441 தொகுதிகளில் போட்டியிட்டு 240 இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றி சதவீதம் 54.

காங்கிரஸ் கட்சி, 328 தொகுதிகளில் போட்டியிட்டு 99 வெற்றி பெற்றது. வெற்றி சதவீதம் 30.

ராகுல் அவர்களே..54 பெரியதா ? 30 பெரியதா ?..

சரி..அதிருக்கட்டும்.

காங்கிரஸ் கட்சி 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பூஜ்யம் இடங்களை பெற்றிருக்கிறது. அதன் ‘கைகளில்’ 14 வாத்து முட்டைகள் இருக்கிறது.
இந்த முட்டைகளை வைத்துக் கொண்டு ராகுல் என்ன செய்யப்போகிறார் ?..

தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, 2019 தேர்தலை விட 2024 தேர்தலில் வாக்கு சதவீதத்தில் சரிவை கண்டுள்ளது. மேகலாயாவில் 14.62 சதவீதத்திலிருந்து தொடங்கி, சண்டீகரில் 0.44 சதவீதம் வரை வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்த சாதனைக்கு கேக் வெட்டி கொண்டாடப்போகிறாரா ராகுல் ?..

ராகுல், நீங்கள் இன்னும் தேர்ச்சி பெறவேண்டும்..அரங்கத்தினுள் முதல் பரிசை பெற்ற அணி கொண்டாடுவதைக்கண்டு இரண்டாவது இடத்தில் உள்ளவரும் எங்களுக்கும் மாலைகளும், சால்வைகளும் அணிவித்து சமமாக கொண்டாட வேண்டும் என நினைப்பது எவ்வளவு அறிவீனமோ அதே போல் நீங்கள் எதிர்பார்ப்பதும் அப்படியே..

பெரியவர்கள் விளையாடுவதை சற்று ஒரமாக நின்று பாருங்கள்..அப்போதாவது ஆட்டத்தின் தன்மை தெரிகிறதா என்று பார்ப்போம்..

கட்டுரை : புட்டி S. ரகோத்தமன்.

Related posts