Special Stories

செல்வ மகள் சேமிப்பு திட்டம் – சிறப்பு பார்வை

பெண் குழந்தைகளின் எதிர்கால செலவுகளான திருமண செலவு, கல்வி செலவு உள்ளிட்டவற்றிற்காக பெற்றோர்கள் தேர்வு செய்யும் திட்டமாக இருப்பது செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் 2015ல் பிரதமர் மோடி அவர்கள் மூலம் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும். ரூபாய் 1000 அல்லது அதற்க்கு மேற்பட்ட தொகையை தபால் நிலையாட்டிலோ அல்லது RBI ஆல் அங்கீகரிக்கப்பட்ட வங்கியிலோ செலுத்தி இந்த திட்டத்தில் இணையலாம். இதில் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு 1.5 லட்சம் வரை செலுத்தலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். ஆனால் நீங்கள் கணக்கு துவங்கியதில் அதிகபட்சம் 15 ஆண்டுக்கு வரை மட்டுமே சேமிப்பு தொகையை செலுத்த முடியும்.

பெண் குழந்தை 18 வயது நிரம்பியவுடன் அவர்களின் கல்விக்காக பாதி பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். ஆனால் முதிர்வு காலம் முடிந்தவுடனே முழு பணத்தையும் எடுக்க முடியும். ஒரு குழந்தையின் பெயரில் ஒரு அக்கௌண்ட் மட்டுமே தொடங்கப்படும். அதுபோல் ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் வரை மட்டுமே இந்த திட்டத்தில் இணைய முடியும். மூன்றாவது பெண் குழந்தை இதில் இணைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் சேர பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஏதேனும் அடையாள சான்றிதழ், முகவரி சான்றிதழ் போன்றவை தேவைப்படும்.

இந்த திட்டத்திற்க்கான வட்டியினை ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு திருத்தி அமைக்கும். தற்பொழுது இதன் வட்டி விகிதம் 8.2 % ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு ஐடி சட்டம் 1961 80C யில் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெற முடியும். மத்திய அரசு வழங்கும் மற்ற திட்டங்களை விட இதில் அதிகமான வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது. மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம் பல்வேறு ஆதாயங்களை கொண்டுள்ளது.

Related posts