அரசியல்தமிழ்நாடு

விஜயும் சீமானும் கூட்டணி வைத்தால் இதுதான் நடக்கும் – ராவுத்தர் இப்ராஹிம் விளக்கம்

சின்னவரை மன்னவராக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளதா காங்கிரஸை சேர்ந்த ராவுத்தர் இப்ராஹிம் பேசு தமிழா பேசு யூட்யூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் திமுகவை பொறுத்தவரை 2026 தேர்தல் உதயநிதிக்கான தேர்தல், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகிய 2 இளைஞர்கள் அந்த களம் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் எனவே அவர்களை எதிர்கொள்ளும் வகையில் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பேசிய ராவ்தர் இப்ராஹிம், அண்ணாமலையை பாஜக புரோமோட் செய்வதற்கு ஈடு கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலினை திமுகவின் முகமாக அடையாளப்படுத்த முடிவெடுத்திருப்பதாகவும் கூறினார்.

மோடியின் கனவு இதுதான் 

பாஜகவை பொறுத்தவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்ய அழைத்து சென்றதன் மூலம் அவருக்கு கட்சி எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது தெரிய வந்துள்ளதாகவும். அண்ணாமலையை தமிழகத்தின் மிகப்பெரிய தலைவராக்க வேண்டும் என்பதே மோடியின் கனவு என்றும் பேசினார்.

மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை காமராஜர் ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசிய இ.வி.கே.எஸ். இளங்கோவன் குறித்து பேசிய ராவுத்தர் இப்ராஹிம் “காமாலை காரனுக்கு கண்டதல்லாம் மஞ்சள்” என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுக நிர்வாகி போல அந்த கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகவும் பெருந்தலைவர் காமராஜருடன் ஸ்டாலினை ஒப்பிடுவதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

சீமானும் விஜயும் கூட்டணி வைத்தால் தமிழகத்தின் தேர்தல் களமே மாறிவிடும்

2026ம் ஆண்டு சீமானும் விஜயும் கூட்டணி வைத்தால் தமிழகத்தின் தேர்தல் களமே மாறிவிடும் என தனது பார்வையை முன்வைத்தார். அதிமுக மக்கள் நலன் சார்ந்து இயங்கவில்லை என்ற கருத்தை முன்வைத்த இப்ராகிம் தமிழக அரசியல் குறித்தும் தமிழ்நாட்டு மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் அளித்த முழுமையான பேட்டியை இங்கு காணலாம்.

Related posts