அரசியல்இந்தியாஉலகம்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் POK இந்தியா வசம் – முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன் குமார் கருத்து..!

2024 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வென்று மீண்டும் ஆட்சி அமைத்தால் பல ஆபரேஷன்களை மேற்கொண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பேசு தமிழா பேசு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன் குமார் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இயற்கை வளம் மிகுந்த இடங்களாக இருக்கிறது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் பகுதிகளை இந்திய தேசத்துடன் இணைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக முன்வைத்து வருகின்றனர். கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்துள்ள மிகப்பெரிய முன்னேற்றங்களை பார்க்கும் போது தாங்கள் இந்தியாவை விட மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள காஷ்மீர் மக்கள் கருதுவதாக மேஜர் மதன் குமார் தெரிவித்திருந்தார்.

காஷ்மீர் ஆளுநராக ஜெனரல் வி.கே.சிங் நியமனம்?

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் ஆட்சி அமைத்தால் கண்டிப்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இந்தியா வசம் வரும் என்ற கருத்தை முன்வைத்த மேஜர் மதன் குமார். அதற்கான பணிகளை முன்கூட்டியே தொடங்கி விட்டதாக தனக்கு தெரிந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வருகிறது. குறிப்பாக முன்னாள் இந்திய இராணுவப் படை தலைவரும், வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நல இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங்  2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. அதற்கு மாறாக அவர் காஷ்மீரில் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாகவும் அவருக்கு காஷ்மீர் பகுதியில் நாற்பது வருட காலம் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது என்றும் கூறினார்.

இதே போல POK குறித்தும் சர்வதேச அரசியல் குறித்தும் மேஜர் மதன் குமார் அளித்த பிரத்யேக பேட்டியை இங்கு காணலாம்

Related posts