நம்மில் பலரும் வெளிநாடு, சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கும் இடங்களுக்கு சென்றால், அங்கு விதவிதமாக புகைப்படம் எடுத்து அதை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்து இருப்போம். புகைப்படம் நம்மை கடந்த காலத்துடன் இணைக்கிறது. அந்த போட்டோக்களை பார்க்கும் பொழுது, நம்மை அந்த இடத்திற்கு அழைத்து செல்கிறது. ஆனால் உலகில் சில இடங்களில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை எந்த இடங்கள் என்று பார்க்கலாமா :
1. தாஜ்மகால் : உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மகால் இது ஆக்ராவில் அமைந்துள்ளது. இதன் உள்ளே கல்லறை இருப்பதால், இங்கு புகைப்படம் எடுக்க தடை உள்ளது.
2. ஈபிள் டவர் : பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் புகழ் பெற்ற ஈபிள் டவரை இரவில் புகைப்படம் எடுப்பது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. இரவு நீரெட்டில் மின்விளக்கோடு மின்னும் ஈபிள் டவர் படத்துக்கு காப்பிரைட் இருப்பதால் இவ்வாறு சொல்லப்படுகிறது.
3. சிஸ்டைன் செப்பல் : வாடிகன் நகரில் உள்ள சிஸ்டைன் செப்பல் தேவாலயத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை உள்ளது. காரணம் இந்த தேவாலயத்தில் உள்ள விலைமதிப்பற்ற ஓவியங்கள், கேமரா பிளாஷ் ஆல் பாதிக்கப்படும் என்று கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. வெஸ்ட்மினிஸ்டர் அபே : லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேக்கும், பிரிட்டன் அரச குடும்பத்திற்கும் வரலாற்று ரீதியாக தொடர்பு உள்ளது. மூன்றாம் சார்லஸ் மன்னராக, இந்த சர்ச்சில்தான் பொறுப்பேற்றார். இதன் காரணமாவே இந்த தடை அமலில் உள்ளது.
5. லாஸ் வேகாஸ் கேசினோஸ் : அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் உள்ள சூதாட்ட விடுதிகளில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்ட விடுதிகளில் விளையாடுவோர் தடைபட்ட விபரங்களை பாதுகாக்கவும், கொள்ளையடிப்பதை தடுக்கவும் இந்த தடை உள்ளது.
6. பென்டகன் : அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் உள்ளேயும் வெளியேயும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.
7. நியூஸ்வான்ஸ்டீன் கோட்டை : ஜெர்மனியின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான, 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நியூஸ்வான்ஸ்டீன் கோட்டை சிறந்த திகழ்கிறது. அதிக அளவில் பார்வையாளர்கள் வருவதால் இந்த கோட்டையின் உள்ளே போட்டோ, வீடியோ எடுக்க அனுமதி இல்லை.
8. அமெரிக்க போஸ்ட் ஆபிஸ் : அமெரிக்காவின் அஞ்சல் அலுவலக விதிப்படி, அலுவலகத்தில் உள்ளே போட்டோ எடுக்க அனுமதியில்லை.
9. வேலி ஆப் தி கிங் : எகிப்தில் உள்ள வேலி ஆப் தி கிங் என்று அழைக்கப்படும் மன்னர்கள் கல்லறை அமைந்துள்ள இடங்களில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.