Editor's Picksஅரசியல்தமிழ்நாடு

OPS-ஐ அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை – EPS திட்டவட்டம்

பொதுக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவிற்கு ஓபிஎஸ் மீண்டும் வந்தா சேர்த்துப்பீங்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கியது. பொதுக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவு கட்சியின் பொதுச்செயலாளரான நானோ, எஸ்.பி.வேலுமணி அவர்களோ நீக்கவில்லை, அதிமுக தொண்டர்களின் மனநிலையில் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணப்படி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக என்பது கடையில் விற்கும் பொருள் இல்லை இது ஒரு கட்சி, கட்சிக்கு விரோதமாக ஓபிஎஸ் செயல்பட்ட காரணத்தால்தான் கட்சியின் விதிமுறையை பின்பற்றியே அந்த முடிவு எடுக்கப்பட்டது. அதனால் அவரை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொள்வது சாத்தியமில்லை என கூறியுள்ளார்.

அதிமுக கார்ப்பரேட் கம்பெனி கிடையாது

அதே போல சசிகலா அவர்கள் அதிமுகவை ஒன்றிணைக்க போவதாக கூறிய கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கட்சியிலேயே இல்லாத சசிகலா எப்படி அதிமுகவை ஒருங்கிணைக்க முடியும். 2021ல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பேன் என அறிவித்த சசிகலா 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசியலில் ரீ என்ட்ரி கொடுப்பேன் என கூறியுள்ளார். அதிமுக ஒன்றும் கார்ப்பரேட் கம்பெனி இல்லை இது ஒரு அரசியல் கட்சி என பதிலளித்துள்ளார்.

வாயிலே வடை சுடும் அண்ணாமலை

அதே போல அண்ணாமலை அவர்கள் அதிமுக கட்சி அழிந்து கொண்டிருக்கிறது என்ற கருத்துக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை பேட்டி கொடுப்பதின் மூலமே தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். அவர் பாஜக மாநில தலைவராக இருந்த போது எந்த புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தார். அவர் வாயிலே வடை சுட்டு வருகிறார். எப்போது பார்த்தாலும் பொய் பேசுகிறார். மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கோவையில் பொய் சொல்லிதான் ஓட்டு பெற்றார். உண்மை சொல்லி பெறவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக பதிலளித்தார். மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைத்துள்ளதால், 100 நாளில் நிறைவேற்றுவேன் என முன்னர் கூறிய வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றுவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts