தமிழ்நாடு

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை

தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், தி.நகர், சிஐடி நகர், ஸ்ரீராம்பேட் பகுதியில் நடைபெற்ற மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தமிழகத்தில் ஒவ்வொரு பருவமழைக்கு முன்பாக, பருவமழையினால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிந்து, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.தற்போது, டெங்கு பாதிப்புகளினால் ஏற்படும் உயிரிழப்புகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள்ளது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது

கடலூர், தஞ்சாவூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உண்ணி காய்ச்சல் பாதிப்பும், சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் எலி காய்ச்சல் பாதிப்பும், சென்னை, திருச்சி, தேனி போன்ற பகுதிகளில் மஞ்சள்காமாலை பாதிப்பும், சென்னை, கோவை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்புளுயஞ்சா காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்தவாரம் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்புகளினால் உயிரிழந்தவர்களின் என்னைகை 3 ஆக உயர்ந்துள்ளது. அதனால், கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் பொது சுகாதாரத் துறை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் இருந்து வரும் போக்குவரத்து வாகனங்கள், பேருந்துகள், கார்கள் போன்ற அனைத்து வாகனங்களையும், பயணிகளையும் பரிசோதிக்கும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக நடுங்கனி,சோழடி,தளுர்,நம்பியார்குன்னு, பட்டாவயல் போன்ற 5 இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் பாதிப்புகள் தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை என்று தெரிவித்தார்.

Related posts