உணவு

வேப்பம் பூ பொரியல் – செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

வேப்பம் பூ – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 8
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறிதளவு
தேங்காய் துருவல் – சிறிதளவு
கடுகு, உளுந்தம்பருப்பு – சிறிதளவு
வரமிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை
முதலில் வேப்பம்பூவை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், சின்னவெங்காயம் பிறகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வேப்பம்பூ சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிளறி அதனுடன் வெள்ளம் சிறிதளவு சேர்த்து கிளறிக் கொள்ளவும். பின், அதனுடன் துருவிய தேங்காயையும் சேர்த்துக் கொள்ளவும் . இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வேப்பம் பூ பொரியல் ரெடி .

Related posts