அழகுக்குறிப்புகள்மருத்துவம்

தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை விரட்டும் நலங்குமாவு தயாரிப்பது எப்படி ?

இன்றைய காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு ஆகியவற்றால் மக்களிடையே தோல் சம்மந்தப்பட்ட  நோய்கள் வேகமாக பரவி வருகிறது . நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் சோப்புகள் இந்த தோல் நோய்களுக்கு தீர்வாக அமையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த சோப்புகளுக்கு பதிலாக நாம் வீட்டிலேயே தயாரிக்கும் நலங்கு மாவு தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையலாம். அந்த நலங்கு மாவை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

பாசிப்பயறு 500 கிராம், வெட்டி வேர் 100 கிராம், சந்தனச் சிறாய் 50 கிராம், கோரைக் கிழங்கு 50 கிராம், கார்போகரிசி 50 கிராம், விலாமிச்சம் வேர் – 100 கிராம், கிச்சிலி கிழங்கு – 50 கிராம் ( தேவைப்பட்டால் சிறிது கஸ்தூரி மஞ்சளையும் வெந்தயத்தையும் சேர்த்து கொள்ளலாம் )

செய்முறை 

மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

உபயோகம் 

தினமும் இந்த பொடியை தேய்த்து குளித்து வந்தால் தோல் சம்மந்தமான நோய்கள் குணமடைவதுடன் சருமமும் நல்ல பொலிவை பெறும்.

Related posts