பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3வது முறையாக இந்தியா நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகா பொறுப்புகளை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.அந்த அமைச்சரவை குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை, விண்வெளித் துறை, அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள், பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போல ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சராகவும், அமித் ஷா உள்துறை அமைச்சர்: கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதின் ஜெயராம் கட்கரி சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராகவும், ஜெகத் பிரகாஷ் நட்டா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிவராஜ் சிங் சௌஹானுக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையும், ஊரகவளர்ச்சித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராகவும் பெரு வணிக நிறுவனங்கள் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். சுப்பரமணியம் ஜெயசங்கருக்கு வெளியுறவுத் துறையும், மனோகர் லால் கட்டாருக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறையும் மின்சாரத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹெச்.டி குமாரசுவாமி கனரக தொழில்கள் துறை அமைச்சர் மற்றும் எஃகு துறை அமைச்சர், பியூஷ் கோயல்வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர், ஜித்தன் ராம் மாஞ்ஜி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளனர்.
ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் பஞ்சாயத் ராஜ் அமைச்சர் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, சர்பானந்த சோனாவால், துறைமுகங்கள் கப்பல் துறை மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கிஞ்ஜாரப்பு, ராம்மோகன் நாயுடு விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் – பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், கிரிராஜ் சிங் – ஜவுளித் துறை அமைச்சர், அஷ்வினி வைஷ்ணவ் – ரயில்வே அமைச்சர், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை, ஜோதிராதித்திய சிந்தியா தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர், பூபேந்தர் யாதவ் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர், கஜேந்திர ராஜ் ஷெகாவத் கலாச்சாரத்துறை அமைச்சர், சுற்றுலாத் துறை அமைச்சர், திருமதி அன்னபூர்னா தேவி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர், கிரண் ரிஜிஜூ நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர், மன்சுக் மாண்டவியா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, ஜி.கிஷன் ரெட்டி நிலக்கரித்துறை, சுரங்கத்துறை, சிராக் பாஸ்வான் உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர், சி ஆர் பாட்டீல் ஜல்சக்தித் துறை அமைச்சர் என பதவியேற்று உள்ளனர்.