உலகம்தமிழ்நாடு

குவைத் தீ விபத்தில் பலியானோர் உடல்களுக்கு அமைச்சர் மஸ்தான் அஞ்சலி

குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது . இதில் இந்தியாவை சேர்ந்த 45 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 7 பேரும் ,கேரளத்தை சேர்ந்த 23 பேரும்,ஆந்திராவைச் சேர்ந்த மூவரும், கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரும் பிற மாநிலத்தவர் பதினோரு பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்கள் அனைத்தும் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் கொச்சின் கொண்டுவரப்பட்டது. தமிழகம்,கேரளம்,ஆந்திரா மற்றும் கர்நாடகவை சேர்ந்தவர்களின் உடல்கள் கொச்சினிலுருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள உடல்களை டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொச்சினில் உள்ள உடல்ககளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ஒன்றிய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங், சுரேஷ் கோபி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அந்தந்த மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பாக ரூ 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதே போல் தமிழகத்தை சார்ந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ 5 லட்சம் நிவாரணமும், கேரளாவைச் சேர்ந்த 23 பேரின் குடும்பங்களுக்கு கேரள அரசு சார்பாக ரூ 5 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் கொச்சின் சென்றுள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடல்களை தமிழகம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த வீராசாமி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னத்துரை, சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த சிவசங்கர், திண்டிவனம் பகுதியை சேர்ந்த முஹம்மது ஷெரீப், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கருப்பணன் ராமு, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜு எபினேசன், பேராவூரணியை சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உடல்களை கொண்டு செல்லும் ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு வழித்தடமும் உறு துணையாக காவல் துறையினரும் அனுப்பப்பட்டுள்ளது.