விளையாட்டு

ஐபிஎல் பைனல் சுவாரசியங்கள்..! இந்திய வீரர்கள் யாருமில்லை..!

12 ஆண்டுகளுக்கு பின்:

ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன் இறுதிப் போட்டி, சென்னையில் நாளை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பைனல் நடந்துள்ளது. தற்போது 3வது முறையாக 12 ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்கிறது. 2012 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து இருந்தது, இதனால் நாளை நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

இந்தியர் யாருமில்லை:

நாளை நடைபெறும் இறுதி போட்டி முடிந்த ஒரே வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற 15 வீரர்களில் ஒருவர் கூட ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாடவில்லை. ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. ஹைதராபாத் அணியின் சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹைதராபாத் அணியில் உள்ள யாக்கர் கிங் நடராஜன் ஆகியோர் சிறப்பாக விளையாடியுள்ள போதும் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கொல்கத்தா அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரிங்கு சிங், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் பிளேயராக இடம் பெற்றிருக்கிறார்.

குவாலிஃபையர் 2 :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது.

கோப்பையை வென்ற ஆண்டு:

இதுவரை கேகேஆர் 2 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன. 2021, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணியம், 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது. இதுவரை இரு அணிகளும் 27 போட்டிகளில் மோதி உள்ளன. அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 09 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related posts