உணவுசமூகம் - வாழ்க்கை

சமையலறை பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு சில டிப்ஸ்…!

சமையலறை நமது அன்றாட உணவைத் தயாரிக்கும் இடம், பசியின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நம்மை ஆரோக்கியமாகவும், நலமாகவும் வைத்திருக்கும் ஆற்றலை அளிக்கும் உணவு தயாரிக்கும் இடமாக உள்ளது. அப்படி உள்ள சமையல் அறையில் சில விஷயங்களை செய்தால் சிறப்பாக இருக்கும்.

 • வீட்டில் எறும்பு வராமல் இருப்பதற்கு சர்க்கரையுடன் ஒன்றிரண்டு கிராம்பு துண்டுகள் போட்டால் எறும்பு அண்டாது.
 • பூண்டு உரிப்பதற்கு பலரும் சிரமப்படுவார்கள். பூண்டினை சுலபமாக உரிப்பதற்கு சிறிது நேரம் வெயிலில் எடுத்து வைத்த பிறகு உரித்தால் பூண்டு தோலினை எளிமையாக உரிக்கலாம்.
 • வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால் கண்களில் எரிச்சல் இருக்காது.
 • காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அண்டாது.
 • இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.
 • அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியை தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டு தேய்க்க வேண்டும்.
 • பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பாக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.
 • வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும், ஓட்டை அடைபடும்.
 • எப்பொழுதாவது உபயோகிக்கும் ஷூக்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு ஷூவிலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.
 • எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.
 • வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி ஆபரங்கள் கருப்பாவதை தடுக்கலாம்.
 • வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

Related posts