சினிமா

3 மணி நேரம் மேக்அப் போட்ட கமலஹாசன் – ரசிகர்களின் ஆதரவை பெறுமா இந்தியன் 2

கமலஹாசனுக்கு சோதனை. இந்தியன் 2 படத்தில் சிக்கல்!
தமிழ் சினிமாவில் கமலஹாசன் திரைப்படம் என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதில் இந்தியன் 2 திரைப்படம் மக்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. லைகா புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தினை ஷங்கர் இயக்கியுள்ளார்.  இந்த படமானது முக்கியமான அரசியல் நிகழ்வு பற்றியும், சமூக செய்திகளை பற்றியும் சொல்லக்கூடியதாக இருக்கிறது . இந்த படம் பல மாதங்களுக்கு பிறகு, வரும் ஜூலை 12ஆம் தேதி 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைப்பை கொடுத்துள்ளார்.
இந்தியன் 2 தமிழ், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியீடு செய்யப்படுகிறது. படத்தில் கமலஹாசன் பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளனர். படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்‌ கொண்டே வருகிறது.

அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அமெரிக்காவில் இந்தியன் 2 படத்திற்கு சுமார் 2500 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் 2 யை தொடர்ந்து அடுத்து இந்தியன் 3 வெளியாகும் என்றும் ஷங்கர் அவர்கள் கூறியுள்ளார். குறிப்பாக படத்தில் கமல் பல்வேறு கெட்டப்பில் நடித்துள்ளார். மேலும் மிகவும் வயது முதிர்ந்த தோற்றத்திற்காக கமல்ஹாசன் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மேக்கப் போட்டுக் கொண்டு நடித்துள்ளார்.

இதுமட்டும் இல்லாமல் தினமும் ஷாட் முடிந்த பின்னர் அவருக்கு போடப்பட்ட பிராஸ்தட்டிக் மேக்கப்பினைக் கலைக்க மூன்று மணி நேரம் ஆகும் என இயக்குநர் ஷங்கர் பேசியிருந்தார். இந்த படத்தின் முதல் பாகத்தில் கமல் ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தியன் படத்தை போலவே இந்தியன் 2 படமும் ரசிகர்களின் ஆதரவை பெறுமா என பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Related posts