தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில், “ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்” என்னும் கருத்துகளை முன் வைத்துள்ளார். அவர் விட்டுச் சென்ற இடத்தைப் பாஜக நிரப்பி வருவதாகவும் பேசியுள்ளார். அதற்கு, ஜெயலலிதா மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து ஆர்.பி.உதயக்குமார் உட்பட பல்வேறு அதிமுக தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “எங்களுடைய கட்சித் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர்கள். ஜாதி, மத, இன, மொழி அனைத்தையும் தாண்டி பல திட்டங்களை தீட்டியவர்கள். என்று கூறியிருந்தார்.
அண்ணாமலையிடம் சவால் விட்ட ஜெயக்குமார்
அதே போல அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் ராமர் கோவிலும் கட்டப்பட வேண்டும் பாபர் மசூதியும் இடிக்கப்பட கூடாது என்று கூறினார். ஆனால் அண்ணாமலை கரசேவைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆள் அனுப்பினார் என்று பொய்யான தகவலை கூறியுள்ளார். அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார் என்று ஜெயக்குமார் சவால் விடுத்து உள்ளார்.
அரசியலை விட்டு விலகுவது எப்போது?
ஆனால் அயோத்தியில் கரசேவை தொடங்க ஜெயலலிதா ஆதரவு என்று அச்சிடப்பட்ட தினசரி நாளிதழ் ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை அவர்கள் சொன்ன கருத்து உண்மை என தெரியவந்துள்ளது. இந்த உண்மையை ஒப்புக்கொண்டு ஜெயக்குமார் அவர்கள் அரசியலை விட்டு விலகுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாஜகவை விட குறைவான வாக்குகள் வாங்கினால் கட்சியை களைத்து விடுவேன் என சவால் விடுத்தார். இப்போது அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் அவர்களும் அண்ணாமலை இடம் சவால் விடுத்துள்ளார். இதன் மூலம் அண்ணாமலையை சுற்றியே தமிழக அரசு இயங்கி வருகிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.