விளையாட்டு

இந்திய அணி அசத்தல் வெற்றி

இலங்கையில் உள்ள தம்புலாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ‘டி-20’ தொடர் நடக்கிறது. ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணியும் மோதின. ‘டாஸ்’ வென்ற யு.ஏ.இ., அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா 13 ரன்கள் மட்டுமே எடுத்து மந்தமான துவக்கத்தை கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ஷபாலி வர்மா 37 குவித்து நம்பிக்கை தந்தார். அடுத்து இறங்கிய ஜெமிமா 14 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (66) அரைசதம் கடந்தார். அதே போல ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி ரன்களை 26 பந்தில் அரைசதம் விளாசி 64 ரன்களை குவித்தார். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன் எடுத்தது.

கடின இலக்கை விரட்டிய யு.ஏ.இ., அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. கவிஷா (40*), கேப்டன் ஈஷா ஓசா (38) ஆறுதல் தந்தனர். இந்தியா சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட் கைப்பற்றினார்.

முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது. ஆட்ட நாயகி விருதை ரிச்சா கோஷ் வென்றார்.