கொளுத்தும் வெயில் என்றாலும், மழை வந்தாலும் சரி, குளிர்காலம் என்றாலும் சரி ஐஸ்க்ரீம் விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ஆனால், ஐஸ்க்ரீம் சாப்பிட்ட உடன் சில வகையான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன என்ன உணவுகள் என இந்த பதிவில் அறியலாம்.
ஐஸ்க்ரீம் நன்மைகள்
பதப்படுத்தப்படாமல் பால், பழங்கள் சேர்த்து பிரெஷ்ஷாக செய்யப்படும் ஐஸ்கிரீமில், உடலுக்கு தேவையான கால்சியம், புரதம், வைட்டமின்ஸ் நிறைந்து இருக்கும். ஐஸ்கிரீமில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு, உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். சோர்வு ஏற்படும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் நல்ல ஒரு ஃபீல் கிடைக்கும். மன அழுத்தம், மன சோர்வு குறைந்து ஒரு விதமான புத்துணர்ச்சி கிடைக்கும்.
பொறித்த உணவுகள்
ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பிறகு எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிட வேண்டாம். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்றில் பாதகமான இராசயன எதிர் வினைகளை ஏர்படுத்தும்.
சூடான பானம்
சில ஐஸ்க்ரீம் சாப்பிட பிறகு டீ அல்லது காபி போன்ற சூடான பானங்களை குடிப்பார்கள். இப்படி குளிர்ச்சியான உணவுக்கு பின் சூடான உணவை எடுத்துக்கொள்ளும் போது வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்படும்.
மதுபானம்
ஐஸ்க்ரீம் உடன் சேர்த்து மதுபானங்களை குடித்தால் வயிற்றுப்போக்கு மற்றும் தலைசுற்றல் உள்ளிட்ட உடல் நல கோளாறுகள் உண்டாக கூடிய வாய்ப்புகள் உள்ளன.
சாக்லேட்
சிலர் ஐஸ்க்ரீம் உடன் சாக்லேட் சேர்த்து சாப்பிடுவர். இப்படி சாப்பிட்டால் சாக்லேட்டில் உள்ள காஃபின் ஐஸ்கிரீமுடன் கலந்து வயிற்று வலியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
சிட்ரஸ் பழங்கள்
ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பின் ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டாம். ஏன் என்றால் இந்த பழங்களில் உள்ள அமிலங்கள் ஐஸ்க்ரீமுடன் இணைந்து வாயு மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே உணவுகளை ஐஸ்க்ரீம் உடன் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஐஸ்க்ரீம் சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பின்பு மற்ற உணவு வகைகளை எடுத்து கொள்வது நல்லது.