அழகுக்குறிப்புகள்மருத்துவம்

வீட்டில் இருந்தபடியே எளிதாக கருவளையத்தை நீக்கலாம்?

இன்றைய தலைமுறையினர் அதிகம் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் கண்களுக்கு கீழே மற்றும் கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. இது ஏற்படுவதற்கு மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் என பல காரணங்கள் கூறப்படுகிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை செய்யாவிட்டால், உங்கள் முகத்தின் அழகை கெடுக்கும். இதை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சரிசெய்யலாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.

க்ரீன் டீ பேக்

க்ரீன் டீ பேக் இரண்டு எடுத்து கொள்ளுங்கள். அதை தண்ணீரில் ஊற வைத்து, 5 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். பின் உங்கள் கண்களை மூடிய நிலையில், அவற்றை 15 நிமிடத்திற்கு வைத்து எடுக்கவும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் கரு வளையத்தை போக்க உதவும். இதை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தக்காளி சாறு

கரு வளையத்தை போக்கி உங்கள் சரும கலரை மீட்டெடுக்க தக்காளி சாறு உதவுகிறது. ஒரு ஸ்பூன் தக்காளி சாறுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். இதை கரு வளையம் உங்கள் இடங்களில் தடவி, 10 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதை ஒருநாளைக்கு இரண்டு முறை செய்தால் கருவளையம் குறைவதை காணலாம்.

குளிர்ந்த பால்

கருவளையங்களை நீக்க குளிர்ந்த பால் உதவுகிறது. இரவு தூங்கும் முன் குளிர்ந்த பாலை கண்களை சுற்றி தடவி கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவி, நைட் க்ரீம் தடவுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும். உருளைக் கிழங்கு சாறு பச்சை உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள். இதை கரு வளையங்கள் உள்ள இடத்தில் தடவி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தினம் செய்து வர கருவளையம் முழுவதும் நீங்குவதை கண் கூடாக பார்க்கலாம்.

மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்தியங்களை செய்து வந்தால் எளிதாக கரு வளையத்தை நீக்கலாம்.

Related posts