ஆடி கூழ் தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு -1 கப்
பச்சரிசி – கால் கப்
தண்ணீர்- 2 கப்
தயிர்-1 கப்
சின்ன வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் -1
உப்பு தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரைத்த கேழ்வரகு மாவை போட்டு தண்ணீரை அந்த பாத்திரத்தில் ஊற்றி கேழ்வரகு மாவு கட்டி போகாதவாறு நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
கால் கப் பச்சரிசியை எடுத்து மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த அரிசி மாவை மற்றொரு பாத்திரத்தில் வைத்து அதில் 2 கப் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த பச்சரிசி மாவு நன்கு கஞ்சி போன்ற பதத்தில் வரும் அளவிற்கு காய்ச்ச வேண்டும். கஞ்சி பதத்தில் பச்சரிசி மாவு வந்தவுடன் அதில் கேழ்வரகு மாவு கலவையை ஊற்றி, அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து, இளம் சூட்டில் இந்த கேழ்வரகு மற்றும் பச்சரிசி மாவு கலவை கட்டிபோகாத வாறு கரண்டியை கொண்டு கலக்கி கொண்டிருக்க வேண்டும். அதிக சூட்டில் வைத்து இந்த கலவையை கலக்கினால் இந்த கூழ் மிகவும் இறுகி களி ஆகிவிடும். கூழ் சரியான பதத்தில் வந்து விட்டது என்பதை அறிய அந்த கூழை சிறிது கரண்டியில் எடுத்து பார்த்தால் அரிசிமாவு மற்றும் கேழ்வரகு மாவு தூள்கள் தனித்தனியாக இருப்பதை காண முடியும். இந்த பதத்தில் கூழ் வந்தவுடன் உடனடியாக பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். உடனடியாக தயிரை இந்த கலவையில் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இந்த கூழில் போட்டு கலக்கிய பின் சுவையான கூழ் உண்பதற்கு தயார். இந்த கூழை வத்தல், மோர் மிளகாய், மாங்காய் என உங்களுக்கு பிடித்த சைடிஷுடன் சேர்த்து சாப்பிடலாம். இது நம் உடலுக்கு நன்மை பயக்கும் பல சத்துக்களும் உள்ளன.