சமூகம்

ஒருவரால் எத்தனை சிம் கார்டு வரை வாங்க முடியும் ?

இந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாகி வருகிறது. தற்போதைய கால கட்டத்தில் சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்ததா ஆட்களை பார்க்கவே முடியாது. இதனால் தொலை தொடர்பு உள்ளிட்டவை எளிது கிடைக்கிறது. ஸ்மார்ட் போன் மூலம் உலகமே கைக்குள் அமைகிறது. இதனை பயன்படுத்தி பொதுமக்களிடம் மோசடி செய்யும் சம்பவங்களும், குற்றங்களும் நடைபெறுவது அதிகமாகி வருகிறது. இதற்க்கு முக்கிய காரணமாக அமைவது சிம் கார்டுதான். இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அப்படி பட்ட சிம் கார்டு பற்றி இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

Subscriber Identification Module என்பதின் சுருக்கம் தான் SIM.

ஒருத்தர் எத்தனை சிம் கார்டு வாங்க முடியும் தெரியுமா ?
இந்தியாவில் ஒருத்தர் தன்னுடைய ஆதார் கார்டு மூலம் அதிகபட்சமாக 18 சிம் கார்டுகள் வரை வாங்க முடியும். 9 சிம் கார்டுகள் நம்முடைய மொபைலில் பயன்படுத்தலாம். 9 சிம் கார்டுகள் மெஷின் டு மெஷின் கம்யூனிகேஷன்னுக்காக வாங்கலாம்.

உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி பயன்படுத்துகிறார்களா என்று எப்படி கண்டிபிடிப்பது ?

மத்திய அரசின் Sanchar Saathi.gov.in என்ற வெப்சைட்டில், Know Your Mobile Connections பகுதியை கிளிக் செய்து, அதன் உள்ளே சென்று, உங்களின் மொபைல் நம்பர், கேப்சா கொடுத்து Fill செய்தால், உங்களின் மொபைலுக்கு ஒரு OTP வரும், அந்த OTP ஐ அதில் கொடுத்து உள்ளே சென்றால், உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உபயோகத்தில் உள்ளது என்ற லிஸ்ட் வரும்.

நீங்கள் பயன்படுத்தாத நம்பரை, Not My Number கிளிக் செய்து ரிப்போர்ட் பண்ணினால் அந்த நம்பர் remove பண்ண முடியும். அப்படி இல்லாமல் நீங்க யூஸ் பண்ற நம்பரே வேண்டாம், அதில்லாமல் நீங்கள் பயன்படுத்துகிற நம்பரே வேண்டாம் எனில், இதில் உள்ள not required ஐ கிளிக் செய்து remove பண்ணலாம்.

Related posts