ஆன்மீகம்

தான்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தின் சிறப்புகள்

திருப்பதியில் வேண்டுதலை செலுத்த இயலாதவர்கள் தான்தோன்றிமலையில் செலுத்தலாம்..

அத்தகைய பெருமையுடைய ஆலயம் நம் தமிழகத்தில் உள்ளதா ?..

ஆம்.. கரூர் அருகே தான்தோன்றிமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயம் அத்தகைய சிறப்பை பெற்றது.

‘ஸ்வயம் வியக்த வெங்கடகிரி’ தானாகவே தோன்றிய பெருமாள். கிழக்கிலிருந்து மேற்காக வியாபித்துள்ள குன்றின் மேல்புறம் அமைந்துள்ளது இத்தலம். இக்குன்றின் மேல்புறம் குடையும் பட்டுள்ள அழகு பொருந்திய குடவரையில் கல்யாண வெங்கடரமண பெருமாள் மேற்கு நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பெருமாள் மகாலட்சுமியை தனது மார்பில் தாங்கிய நிலையில் பிரம்மாண்ட வடிவுடன் காணப்படுகிறார். ஆகையால், தாயாருக்கு தனி சன்னதி இல்லை.

திருப்பதியை போல் தான்தோன்றிமலை எங்ஙனம் சிறப்புடையது என்பதை பார்ப்போம்..

ஸ்ரீ வெங்கடேச பராக்ரமம் என்ற தமிழ் நூலில் சிற்பி டங்கணாச்சாரி என்பவருக்கு பகவான் அருள் புரிந்த செய்தி விளக்கப்பட்டுள்ளது.தீவிர சிவபக்தன். சிவனைத் தவிர வேறு எந்த கடவுளையும் வணங்காதவன்.

வெகுகாலம் பிள்ளை பேறு இல்லாமல் இருந்த டங்கணாச்சாரியின் மனைவி வருத்தமுற்று குழந்தை வரம் வேண்டி திருப்பதி வேங்கடநாதனை மனமுருக வேண்டிக் கொண்டனர். தங்களுக்கு குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் ஐந்தாவது வயதில் அதனையும் அழைத்துக் கொண்டு திருப்பதி சென்று பெருமாளை வேண்டி காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து கொண்டார்கள். தன்னுடைய இந்த வேண்டுதலை கணவனின் சினத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் அவரிடம் சொல்லாமலேயே இருந்தார்.

பகவான் திருவுள்ளம். அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குண்டலாச்சாரி என அக்குழந்தைக்கு பெயர் சூட்டினர். குழந்தைக்கும் ஐந்து வயது ஆயிற்று. பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டிய காலம் வந்தது. இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என உணர்ந்து தன் வேண்டுதலை பக்குவமாக தன் கணவரிடம் எடுத்துரைத்தார். இதைக் கேட்டவுடன் டங்கணாச்சாரி கடுங்கோபம் அடைந்தார். சிவனைத் தவிர சக்தியுள்ள தெய்வம் வேறு இல்லை. நான் திருப்பதிக்கு வர மாட்டேன். நீயும், குழந்தையும் செல்லக்கூடாது என எச்சரித்தார்.

அன்றிரவே அனைவரும் உறங்கிய பின், அக்குழந்தை தன் தந்தையின் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்று மலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்து கொண்டிருந்தான்.

அப்போது அங்கு ஒரு அதிசயம் நடந்தது..என்ன ? – அடுத்த பதிவில் பார்க்கலாம்

 

கட்டுரை – புட்டி S. ரகோத்தமன்

Related posts