அரசியல்சமூகம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றத்தில் நடப்பது என்ன? விவரிக்கும் வழக்கறிஞர் அபிலாஷ்

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர் அபிலாஷ் கோபிநாத் கூறியிருப்பதாவது, திமுக மற்றும் பாமக இணைந்து பி.எ.எல் பதிவு செய்துள்ளனர்.இதன் மூலம் இந்த வழக்கு CBIக்கு இடம் மாற்றம் செய்யப்படும் அல்லது சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும். சி.பி.சி.ஐ.டி விசாரணையை தெளிவாக கையாண்டு அதில் சம்மந்தப்பட்டவர்களை கைதும் செய்கிறது அதனால் CBI விசாரணை எங்களுக்கு வேண்டாம் என்றும் அரசாங்கம் கூறுகிறது.

அதனால் பி.எ.எல் பதிவு செய்துள்ளவர்கள் கூறியிருப்பதாவது 1998ல் இதே போல் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை 2018ல் விடுவித்து விட்டார்கள். அதனால் நீதிமன்றம் சரியாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான் பிஎஎல் என்கின்ற பொது விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கு ஹானரபல் சீஃப் ஜஸ்டிஸ் அவர்கள் ஜூலை 3 ம் தேதி வரை மாநில அரசுக்கு அவகாசம் கொடுத்து இருக்கிறார். அதன்பின் இந்த நிலை அறிக்கையை வைத்து சிறப்பு விசாரணை வேண்டுமா? வேண்டாமா என்று தீர்மானிக்கப்படும் என்று கூறினார். மேலும் பேசிய வழக்கறிஞர் அபிலாஷ் கோபிநாத் அவர்கள்.

மெத்தனால் என்பது சுலபமாக கிடைக்கக் கூடிய ஒன்றாக விளங்குறது. இந்த மெத்தனாலை எந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என்று தமிழக அரசாங்கம் தான் யோசித்து அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் . சில எதிர்க்கட்சிகள் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு உதவி தொகை தரக்கூடாது என குற்றம் சாட்டி வருகின்றன, இது முதல் முறை நடப்பது இல்லை 1996 ல் திரு.கருணாநதி அவர்கள் இதே போல் நடந்த கள்ளச்சாராய சம்பவத்திற்கு எந்த ஊக்க தொகையும் கொடுக்க வேண்டாம் , கொடுத்தால் அவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் என்று கூறினார்.ஆனால் இப்பொது அவரது மகன் திரு .மு .க. ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு கள்ளச்சாராய இறப்பிற்க்கும் ரூபாய் 10 லட்சம் கொடுத்துள்ளார்.அவர்களுக்கு தேவை ஓட்டு தான் அந்த இடத்தில் அவர்கள் பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் என்று வழக்கறிஞர் அபிலேஷ் கோபிநாத் கூறியிருக்கிறார். அவர் அளித்த முழு நேர்காணலை இந்த கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Related posts