பயணம்

சென்னையில் இந்த இடங்களுக்கு உங்கள் குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்!

கோடை விடுமுறை தொடங்கி பல நாட்கள் ஆகி விட்டது. ஆனால், உங்கள் வீட்டு குழந்தைகளை எங்கும் அழைத்து செல்லவில்லை என்ற கவலைப்படுகிறீர்களா? உங்களுக்காவே சென்னையில் தனித்துவமான அருங்காட்சியங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு சென்றால் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவது மட்டும் அல்லாமல் நிறைய விஷயங்களை கற்று கொள்ள முடியும். அவற்றை பற்றி அறிந்து கொள்வோம்.

அரசு அருங்காட்சியகம்

எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் இந்தியாவின் மிக பழமையான அருங்காட்சியங்களில் ஒன்று. 1851ல் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பல அரிய நினைவுச்சின்னங்கள், கலைப்பொருட்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் பழங்கால தொல்பொருள் கண்டுபிடிப்புகள் உள்ளன. இது பல வரலாற்று கதைகளை கொண்டுள்ளது. குழந்தைகள் நமது மரபு சார்ந்த விஷயங்களை இந்த அருங்காட்சியகத்தில் தெரிந்து கொள்ளலாம். இதன் வளாகத்தில் 46 கேலரிகள் உள்ளன. இங்கு செல்வதற்கான நுழைவு கட்டணம் வெறும் 15 ரூபாய் மட்டுமே.

ரயில் அருங்காட்சியகம்

ரயில்களின் வரலாற்றை அறிந்துகொள்ள வில்லிவாக்கத்தில் உள்ள ரயில்வே அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 1800களில் பிரிட்டிஷ் ராஜ் கட்டிய ரயில் பாதைகள், நீராவி என்ஜின்கள், பழங்கால பெட்டிகள் என பிரமிக்க வைக்கும் வரலாற்றை எடுத்து கூறும் வகையிலான பொருட்கள் உள்ளன. இங்கு சென்றால் உங்கள் குழந்தைகள் கண்டிப்பாக என்ஜாய் செய்வார்கள். இங்கு செல்ல ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும்.

கிளிக் ஆர்ட் மியூசியம்

ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இந்த கிளிக் ஆர்ட் மியூசியம், குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பும் இடமாக இருக்கும். ஏனெனில் உங்கள் சமூக ஊடகங்களில் போஸ்ட் செய்வதற்கான புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். இங்கு பிரபலங்கள், பொம்மைகள் உள்ளிட்டவை 3டி எஃபெக்ட் ஆர்டாக இருக்கும். இவற்றுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். இங்கு செல்ல டிக்கெட்டின் விலை ரூ.150.

மேல் உள்ள அருங்காட்சியங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல உங்களுடைய நேரத்தையும் ஆக்கபூர்வமான முறையில் செலவிட உதவும். அதே போல பல புதிய விஷயங்களையும் கற்றுக்கொள்ள முடியும், எனவே எப்போதும் சினிமா, மால் என செல்லாமல் இது போன்ற அறிவை வளர்க்கும் இடங்களுக்கும் செல்வது புதிய அனுபவத்தை கொடுக்கும்.

Related posts