சினிமாவெள்ளித்திரை

“குட் பேட் அக்லி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..! பொங்கலுக்கு தரமான சம்பவம் இருக்கு..!

மார்க் ஆண்டனி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தை வைத்து “குட் பேட் அக்லி” என்ற படத்தை இயக்கவுள்ள நிலையில், தற்போது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா எதிர்பாராததை எதிர்பாருங்கள் என ட்வீட் போட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளார். போஸ்டரில், சீனாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் போல நடிகர் அஜித் குமாரின் லுக் இருப்பதாக தெரிகிறது. மேலும் போஸ்டரில் டிராகன் டிசைன் எல்லாம் இருக்கின்றன. குட் அஜித், பேட் அஜித் மற்றும் அக்லி அஜித் என ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமார் ரசிகர்களுக்கு பக்காவான ட்ரீட் கொடுக்க போகிறார் எனத் தெரிகிறது.

குஷியில் அஜித் ரசிகர்கள்

ஒரே லுக்கில் மூன்று தோற்றங்களுடன் அஜித் தென்படும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவரது உடல் முழுக்க டாட்டூக்கள் குத்தப்பட்டு உள்ளன. மேலும், போஸ்டரில் நடு விரல் காட்டுவது போல உள்ள நிலையில், அதை ஃபிளர் செய்து ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்கியிருப்பது ஏன் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
அஜித் அவர்கள் நீண்டகாலமாக நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், “குட் பேட் அக்லி” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கை பார்க்கையில் அஜித் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை போல உள்ளது. இதில் அஜித் அவர்களின் பாத்திர படைப்பு மங்காத்தா, வேதாளம் போல ரசிகர்களை கவரும் வகையில் இருக்குமா என்பது படம் வெளி வந்த பிறகே தெரிய வரும்.

மேலும், இந்த படத்தை ‘புஷ்பா’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2025ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித் கவனம் செலுத்துவார் என தெரிகிறது. மார்க் ஆண்டனி படத்துக்கு பிறகு நிச்சயம் ஒரு மாஸான கமர்ஷியல் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts