உடல் ஆரோக்கியத்துக்கான இந்த 8 பழக்கங்களை பின்பற்றினால் போதும்…
நாம் வாழும் இந்த அவசர உலகில் யாரும் உணவு பழக்கத்தினை சரிவர கவனித்து கொள்வதில்லை. அதன்படி நம் வாழ்க்கையில் இந்த 8 வழக்கங்களை நடைமுறை படுத்திக்க கொண்டால், உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். எதை சாப்பிடுகிறோம் என்பதை கவனத்துடன் பார்க்க வேண்டும். முக்கியமாக உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். சர்க்கரைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது உணவை அனுபவிப்பது உண்டு, வாழ்க்கையை வாழ்வோம்.
1) தானியங்கள், பாஸ்தா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்துள்ள உணவுகளை, உங்கள் உணவு அட்டவணையில் முக்கிய உணவாக மாற்றுங்கள். ஏனெனில் அவற்றில் உள்ள நார்ச்சத்து உங்களை நாள் முழுவதும் ஆக்டிவாக இருக்க உதவும்.
2) ஒரு நாளைக்கு குறைந்தது 2 பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டு வாருங்கள்.
3) உங்கள் வாராந்திர உணவில் மீன்களை 2 பகுதிகளில் சேர்க்கவும், குறிப்பாக ஒமேகா -3 கொண்ட எண்ணெய் மீன்களை அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டும். ஒமேகா -3 மீன்களை அதிக அளவில் எடுக்கும் போது மனநிலையை மேம்படுத்தவும், மனச்சோர்வினை குறைக்க உதவுகிறது.
4) கொழுப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளால் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் ஏற்படும்.
5) இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு 6 கிராம் உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்.
6) வழக்கமான உடற்பயிற்ச்சியில் ஈடுபடுங்கள் மற்றும் நோய்களைத் தடுக்க ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்.
7) உங்கள் உடலில் நீரேற்றமாக இருக்க தினமும் குறைந்தது 1.2 லிட்டர் முதல் 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கவும். (ஆண்கள் ஒரு நாளைக்கு சுமார் 3.7 லிட்டர் தண்ணீரும், பெண்கள் ஒரு நாளைக்கு சுமார் 2.7 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்)
8) கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்க கூடாது. அதிகப்படியான உடல் நோய்களுக்கு அடிப்படை இருப்பதே இந்த காலை உணவை தவிர்ப்பதால் தான்.
இந்த பழக்கங்களுடன் சேர்த்து சரியான தூக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை கடைபிடித்தால் ” நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” என்ற கூற்றுக்கு இணங்க ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.