தினமும் வெந்தயத்தை காலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள் நமது உடல் ஆரோக்கியத்தை சரிசெய்யும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நமது வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் வெந்தயத்திற்கு தனி இடமுண்டு. உடலில் சூடு, வயிறு வலி, அல்லது எரிச்சல் ஏற்படும் போது வெந்தையத்தை எடுத்துக்கொண்டால்,அந்த வலியில் இருந்து விடுபடலாம் .அதேபோன்று வெந்தைய களி, வெந்தய குழம்பு, வெந்தய ரசம் என ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளும்போது உடலில் நல்ல மாற்றத்தினை காணலாம். வெந்தயம் கசப்புத்தன்மையாக இருப்பதால் குழந்தைகள் அதை அதிகம் விரும்பமாட்டார்கள். ஆனால் அதன் நன்மைகளை அறிந்த நம்முடைய பாட்டிகளும், அம்மாக்களும் அதை எப்படியாவது உணவில் சேர்த்து சாப்பிட வைத்து விடுவார்கள்.
வெந்தயத்தின் பயன்கள்;
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால்,வயிறு எரிச்சல் ,உடல் சூடு, வயிற்று வலி, பேதி போன்றவைகளுக்கு வெந்தயம் ஒரு முக்கியமான மருந்தாகும். சர்க்கரை நோயாளிகள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி வெந்தயத்திணை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.காலையில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை வாயில் மென்று தண்ணீர் பருகலாம். வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்யைக் கட்டுப்படுத்தலாம்.கொழுப்பை சுலபமாக கரைத்திடவும் வெந்தயம் உதவும்.
குளிர்ச்சி தரும் வெந்தயம் ஆனது துவர்ப்புத் தன்மை உடையது. நரம்புகளைப் பலப்படுத்தும்.அதுபோல வெந்தையக்கீரை உடலுக்கு ஆரோக்கியத்தையும் , குளிர்ச்சியையும் அளிக்கும். கீரையை சப்பாத்தி மாவுடன் சேர்த்து கீரை சப்பாத்தியாகவும் சாப்பிடலாம். தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்து உண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போன்றும் உட்கொள்ளலாம்.
சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்குவதற்கும், இந்த வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. 20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலுக்கு நன்மை அளிக்கும். அதிகமாகும். எனவே உஷ்ண பிரச்சினை ஏற்படாமல் இருக்க வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வெந்தயத்துடன் சேர்த்து குடிக்க வயிறும் உடலும் குளிரும்.