சமூகம்

இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் வீட்டில் நிம்மதி இருக்காது!

நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை மாலை 6 மணிக்கு மேல் யாருக்கும் கடனாக தரக்கூடாது. அப்படி கொடுத்தால் நம் வீட்டில் இருக்கும் செல்வமும் அதோடு சேர்ந்து போய்விடும் என முன்னோர்கள் கூறுவர். சாஸ்திரப்படி சில பொருட்களை தானம் செய்யக்கூடாது. அவை என்ன?, அதற்கு காரணம் என்ன என்பதை கீழே பார்ப்போம்.

மாலை 6 மணிக்கு மேல் தானம் கொடுக்கக்கூடாத பொருட்கள்

அரிசி தானம் செய்வது இயல்பாக நல்லது. ஆனால் மாலை 6 மணிக்கு மேல் செய்யக்கூடாது. ஜோதிட சாஸ்திரப்படி அரிசி, சுக்கிரனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதனால் அரிசியை கொடுக்கும்போது சுக்ர தோஷம் ஏற்படும். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு நிம்மதி இல்லாமல் போகும். இதே போல் நூல், எண்ணெய், காசு, தயிர் மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவற்றை தானமாக கொடுக்கக்கூடாது.

வியாழக்கிழமை தானம் செய்யக்கூடாத பொருட்கள்

கடுகு எண்ணெய், எள், கருப்பு துணி ஆகியவை சனி பகவானுடன் தொடர்புடையது. எனவே சனிக்கிழமைகளில் இவற்றை கடனாக கொடுத்தால் பண பிரச்சனை ஏற்படும். இதே போல் வியாழக்கிழமைகளில் மஞ்சளை கடன் கொடுக்கக்கூடாது. மஞ்சள் வியாழன் கிரகத்தோடு தொடர்புடையது. இதனால் மஞ்சளை கடன் கொடுக்கும்போது குரு தோஷம் உண்டாகும்.

கூர்மையான பொருட்களை தானம் செய்யாதீர்கள்

பூண்டு, வெங்காயம் கேதுவுடன் தொடர்புடையது. இதை கடன் கொடுத்தால் வீட்டில் செழிப்பு நின்று விடும். உப்பு, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதை கடன் கொடுக்கும்போது நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இதேபோல் கூர்மையான பொருட்களான கத்தி, ஊசி போன்றவற்றை தானமாக கொடுத்தால் நம் அதிர்ஷ்டம் போய்விடும்.

தோஷத்தை ஏற்படுத்தும் தங்கம் தானம்

வீட்டில் உள்ள பித்தளை, வெள்ளி பொருட்களை தானம் செய்தால் நமக்கு வரவிருக்கும் அதிர்ஷ்டம் நம்மை விட்டு விலகும் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு பொழுதும் உங்கள் தங்க நகைகளை தானமாக கொடுக்காதீர்கள். இது தங்க தோஷத்தை ஏற்படுத்தும். இதனால் தங்கம் சேருவது குறைந்துவிடும். அப்படி கொடுத்திருந்தால், அது மீண்டும் உங்களிடம் வரும் பொழுது மஞ்சள் நீரில் கழுவி விட்டு அணிந்து கொள்ளுங்கள்.

பூஜை பொருட்கள் தானத்தை தவிருங்கள்

நாம் பயன்படுத்திய செருப்பு, துணிமணிகள் மற்றும் பூஜை பொருட்களை மற்றவருக்கு தானமாக கொடுக்காதீர்கள். இது வீட்டில் பணப்பற்றாக்குறையை ஏற்படுத்தும். பூஜை சம்பந்தமான பொருட்களை கோயிலில் கொடுத்து விடலாம்.

மேலே குறிப்பிட்டவற்றிற்கு பதிலாக அன்னத்தை தானமாக கொடுத்து ஒருவர் அதன் மூலம் பசியாறினால் வீட்டில் உள்ள வறுமை நீங்கும். பயன்படுத்திய துணிக்கு பதிலாக மற்றவருக்கு புதிய துணி எடுத்து கொடுத்தால் ஆயுள் விருத்தியாகும்.

Related posts