உலகம்

G20 நாடுகள் கூட்டமைப்பு எப்படி உருவானது தெரியுமா ?

1999 ஆம் ஆண்டு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக G20 நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ரஸ்யா, சவுத் கொரியா, ஜப்பான், சவூதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, துருக்கி மெக்சிகோ போன்ற நாடுகள் உள்ளது. மேலும் 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியமும் இதில் அங்கம் வகிக்கிறது.

இந்த கூட்டமைப்பின் முதல் மாநாடு 2008 இல் அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. Financial Market, உலக பொருளாதாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. சர்வதேச நிதியம், உலக உலக வங்கி, ஐநா அமைப்பின் தலைவர் தலைவர்கள் பங்கு பெற்றனர்.

G20 நாடுகளின் உச்சி மாநாடு வருடம்தோறும் நடைபெறுகிது. அதில் உலக பொருளாதாரம் பற்றி விவாதிக்கப்படும். G20 கூட்டமைப்பில் உள்ள நாடுகள் உலகளவில் 85 % உற்பத்தியும், 75 % வர்த்தகத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை கொண்டுள்ளது. இந்த கூட்டமைப்பிற்க்கான தலைமை நிரந்தரமாக இல்லாமல், சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. 18வது G20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்று கொண்டது. அடுத்த உச்சி மாநாடு 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரேசிலில் நடைபெறும்.

Related posts