Editor's Picksவிளையாட்டு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்

பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர், ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்- பேட்டர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி அவர் “பினிஷர்” தனது பணியை கச்சிதமாக செய்தார். 15 போட்டிகளில் 326 ரன்களை குவித்து அசத்தினார். (சராசரி 36.22, ஸ்டிரைக் ரேட் 187.35)

இவர் ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி , பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேபடனாகவும் செயல்பட்டார். , ஐ.பி.எல்., அரங்கில் 257 போட்டிகளில் 4843 ரன் எடுத்து உள்ளார். சமீபத்திய “டி -20” உலக கோப்பை தொடரில் வர்ணனையாளராகி அசத்தினார்.

இந்த நிலையில் தற்போது அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர், மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Related posts