விளையாட்டு

சென்னை vs பெங்களூரு போட்டிக்கு பிறகு சர்ச்சை – தோனி செய்தது சரியா?

இந்த ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது மட்டும் அல்லாமல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆர்சிபி அணியை அவமதித்தாரா தோனி

இந்த நிலையில் போட்டி முடிந்த பின்னர் மகேந்திர சிங் தோனி ஆர்சிபி ரசிகர்களிடம் கை குலுக்காமல் சென்றது சர்ச்சைக்குள்ளானது. ஆட்டத்தின் கடைசி பந்தை வீசிய யஷ் தயால் வெற்றி களிப்பில் மைதானத்தை சுற்றி ஓடினார். அவரது கொண்டாட்டத்தில் மற்ற வீரர்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சி கடலில் மூழ்கி விட்டனர். பொதுவாக எந்த ஒரு அணியாக இருந்தாலும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வெற்றியை கொண்டாடிவிட்டு எதிரணி வீரர்களுடன் கை குலுக்குவதே வழக்கம். ஆனால் ஆர்சிபி வீரர்கள் 5 நிமிடங்களாக வெற்றியை கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.

அந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஆர்சிபி வீரர்களுடன்
கை குலுக்குவதற்காக காத்திருந்தனர். நீண்ட நேரமான பிறகும் ஆர்சிபி வீரர்கள் வராததால் மகேந்திர சிங் தோனி கை குலுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறி விட்டார். இதனால் தோனி ஆர்சிபி அணியை அவமதித்து விட்டதாக கூறப்படுகிறது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முழுக்கவே இது குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மையான காரணம் இதுதான்

ஆனால் சிஎஸ்கே ரசிகர்கள் தோனி கை குலுக்காமல் சென்றதற்கு வேறு காரணத்தை கூறுகின்றனர். அதாவது இந்த சீசன் முழுக்கவே மகேந்திர சிங் தோனி பயங்கரமான கால் வலியுடன் தான் கிரிக்கெட் ஆடினார். ஒவ்வொரு போட்டி முடிந்த உடனும் அவர் நேராக முதலுதவி பெறுவது வழக்கம். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோனி நீண்ட நேரம் காத்திருந்தார் ஆனால் ஆர்சிபி வீரர்கள் கை குலுக்க வரவில்லை. அதனால் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர்கள், துணை பயிற்சியாளர்கள், அந்த போட்டியில் விளையாடாத வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப் ஆகியோரிடம் கை குலுக்கிவிட்டே சென்றார். பெங்களூரு அணியை அவமதிப்பது தோனியின் நோக்கம் அல்ல. அவரது உடல் நலம் ஒத்துழைக்காத காரணத்தால் தான் தோனி மைதானத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

 

 

 

Related posts