சினிமா

“நான் கடைசி வரை சிங்கிள்தான்” – ஸ்ருதி ஹாசன்

இந்த வார சினிமா செய்திகள்

 

புஷ்பா தி ரூல்

அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான “புஷ்பா தி ரைஸ்” படம் அனைத்து மொழிகளில் வெளியாகி சக்கைபோடு போட்டது. இந்த நிலையில், இந்த படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து “புஷ்பா 2 தி ரூல்” படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

விடா முயற்சி

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தக் லைப்

இயக்குனர் மணிரத்னம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமல் ஹாசனுடன் கைகோர்த்து “தக் லைப்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்து வருகிறார். தற்போது, படப்பிடிப்பிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதிஹாசன்

இணையத்தில் நடிகர் நடிகைகள் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார்கள் அப்படி நடிகை இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர்கள், தற்போது நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்று கேட்டார்கள். அதற்கு ஸ்ருதி ஹாசன், நான் சிங்கிள் தான் மிங்கிளாக விரும்பவில்லை. என்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். அதில் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று ரசிகர்களுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

கார்த்திக்கின் “மெய்யழகன்”

96 படத்திற்கு பிறகு இயக்குனர் பிரேம் குமார் நடிகர் கார்த்திக்குடன் கை கோர்த்துள்ளார் . இந்த படத்தை 2 நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்திக்கின் 27 ஆவது படமான இந்த படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “மெய்யழகன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts