உணவு

வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ்

வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ்
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 3
ஓட்ஸ் – 1\2 கப்
உப்பு – ஒரு சிட்டிகை
உலர்ந்த திராச்சை – 1\2 கப்
பட்டை பொடி – 1\4 டீஸ்பூன்
சாக்கோ சிப்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மாசித்து வைத்துக் கொள்ளவும்.
அத்துடன் ஓட்ஸ் பொடித்து சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் ஒரு சிட்டிகை உப்பு, உலர்ந்த திராட்சை சேர்த்து ஸ்பேட்டுலா வைத்து நன்கு கலந்து விட்டால் குக்கீஸ் கலவை தயார். குக்கீஸ் பேக் செய்ய பேக்ட்ரே எடுத்து அதில் பட்டர் பேப்பர் போட்டு தயாராக வைக்கவும். பின்னர் கலந்து வைத்துள்ள குக்கீஸ் கலவையை ஒரு ஐஸ்கிரீம் ஸ்கூப்பில் எடுத்து பேக்கிங் ஷீட்டில் வைக்கவும். அதன் மேல் கரண்டி வைத்து ஒரு அழுத்தம் கொடுத்து,சாக்கோ சிப்ஸ் வைத்து அழுத்தவும். பின்னர் மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி செல்ஸியஸ் வைத்து பத்து நிமிடங்கள் ஹீட் செய்து பதினைந்து நிமிடங்கள் பேக் செய்யவும். அப்படியே கொஞ்சம் விட்டு ஆறியவுடன் எடுத்தால் சுவையான கிரிஸ்பியான பனானா ஓட்ஸ் குக்கீஸ் தயார் .

Related posts