சினிமாவெள்ளித்திரை

நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா – அதிர்ந்து போன மேடை

தெலுங்கு திரையுலகில் ஸ்டார் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பாலகிருஷ்ணா என்ற பாலைய்யாவை சுற்றி சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் “கேங்ஸ் ஆஃப் கோதாவரி” பட விழாவில் நடிகை அஞ்சலியிடம் நடந்து கொண்ட செயலால் கடும் சர்ச்சைகளுக்கும், ட்ரோலுக்கும் ஆளாகி வருகிறார். அதுமட்டுமின்றி அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

என்டிஆரின் மகனான நந்தமூரி பாலகிருஷ்ணா சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் படங்களில் இயற்கைக்கு முரணான காட்சிகளே அதிகம் இடம் பிடிக்கும். உதாரணத்திற்கு ஒற்றை விரலில் அதிவேக ரயிலை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவது, துப்பாக்கியில் சுட்டு பறக்கும் விமானத்தை வீழ்த்துவது. ஒரே உதையில் காரை பல கிலோமீட்டர் திருப்பி அனுப்புவது என அவர் நடித்த பல காட்சிகள் ரசிகர்கள் கூறுவதுண்டு. அவர் நடித்த படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி வந்தாலும், அவருக்கென ரசிகர்கள் கூட்டம் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

பட காட்சிகளில் நடித்து சர்சசை ஆனதை விட நிஜ வாழ்க்கையில் சில சம்பவங்களை செய்துள்ளார் பாலகிருஷ்ணா. ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய காலணியை அணிவிக்க சொல்லி உதவியாளர் ஒருவரை அடித்தது, தன்னுடன் செல்ஃபி எடுக்க வரும் ரசிகர்களின் செல் போன்களை தட்டிவிடுவது என அவரது செயல்பாடுகள் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், விஷ்வக் சென், அஞ்சலி, நேஹா ஷெட்டி, நாசர் ஆகியோர் நடித்திருக்கும் “கேங்ஸ் ஆஃப் கோதாவரி” பட விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது மேடையில் வைத்து அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத நடிகை அஞ்சலி சிரித்த படி மேடையில் நின்றாலும், ஒரு நிமிடம் மனதில் கலங்கபட்டு இருப்பார் என அஞ்சலியின் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர் .

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாலைய்யாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு நடிகையிடம் மூத்த நடிகர் இப்படி நடந்து கொள்ளலாமா..? என்று கேள்வி கேட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும், மற்றொரு வீடியோவில், அவர் அமர்ந்திருக்கும் போது இரு பாட்டில்கள் இருக்கின்றன, அதில் ஒன்று தண்ணீரும், மற்றொன்றில் மதுபான கலரில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. குடிபோதையில், அவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது எதார்த்தமாக தள்ளி நிக்க செல்வதற்கு தள்ளி விட்டாரா என்பது அவருக்கே தெரியும்.

Related posts