பேசு தமிழா பேசு யூடுப் சேனலுக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி ராஜேந்திர ராஜா பேட்டி அளித்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என பேசினார். கொலையாளிகள் ஆம்ஸ்ட்ராங் ஓடாமல் இருப்பதற்கு அவரது கால் நரம்புகளையும் பேசாமல் இருப்பதற்கு அவரது வாய் பகுதியிலும், மூளை செயல்படாமல் இருக்க அவரின் தலைப்பகுதியிலும் வெட்டி உள்ளனர். ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் வருவதற்குள் கொலையை கச்சிதமாக முடிக்க வேண்டும் என கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர் என்று அவர் கூறினார். ராஜேந்திர ராஜா அளித்த முழு பேட்டியை இந்த வீடியோவில் காணலாம்.