அரசியல்தமிழ்நாடு

திமுக ஆட்சியில் தேச விரோத செயல்பாடு அதிகரித்து வருகிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில், சாலையோர சுவர்களில், ‘INDIA Impose NEET, Tamil Nadu Quit India” இந்தியா ஒழிக’ உள்ளிட்ட வாசகங்கள் சுவர்களில் எழுதப்பட்ட விவகாரம் நாடு முழுக்க அதிர்ச்சியை உண்டாக்கியது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். குறிப்பாக மத்திய இணை அமைச்சர் திரு.எல் முருகன் தனது x பக்கத்தில் இது குறித்து விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்தாவது நீட் வெறுப்பு போர்வையில் பிரிவினைவாத பிரசாரம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாரா? தமிழகத்தில் திமுக கூட்டணியினர் செய்து வரும் நீட் வெறுப்பு பிரசாரம், தேச விரோத கும்பல்களுக்கு எந்த அளவிற்கு ஊக்கமளிக்கிறது என்பதற்கு சான்றுகள் தான் இவை. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில் சாலையோர சுவர்களில் நீட் எதிர்ப்பு என்ற போர்வையில் பிரிவினைவாத, தேசவிரோத கருத்துகள் அப்பட்டமாக பரப்பப்படுகின்றன. திமுக ஆட்சியில் தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்து வருவது, பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனைக்குள்ளாக்கும் செயல். இதுபோன்ற பிரிவினைவாத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு விடும். தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேசவிரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும். அதே போல வானதி ஸ்ரீனிவாசன் தேசப் பிரிவினையை தூண்டும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், திமுக, ‘தனித் தமிழ்நாடு’ என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட கட்சி. நமது அரசியல் சட்டம் உருவான பிறகு, பிரிவினை கோரிக்கையை வெளிப்படையாக முன் வைத்தால், கட்சி நடத்த முடியாது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாது என்பதால் பிரிவினை கோரிக்கையை அக்கட்சி கைவிட்டது. ஆனாலும், மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பதை ஒருபோதும் கைவிடவில்லை. இப்போது பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடம் விதைப்பதற்கு, ஓர் ஆயுதமாக ‘நீட் எதிர்ப்பை’ கையில் எடுத்துள்ளது. தேசத்திற்கு எதிரான அதுவும் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் அனுமதிக்க கூடாது. அவர்களை இரும்புக் கரம் கொண்டு கொடுக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் வாசகங்களை எழுதியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு எந்த இடமும் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts