கேரளாவை சேர்ந்த இளம் நடிகையான அனிகா சுரேந்திரன் 2007ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழிலும் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார்.
அஜித் மகளாக 2 படங்களில் நடித்த அனிகா
குறிப்பாக அஜித் குமார் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷாவின் மகளாகவும் அவரது இறப்புக்கு பிறகு அஜித்தால் வளர்க்கப்படும் வளர்ப்பு மகளாகவும் நடித்து கவனம் ஈர்த்திருப்பார். அதன் பிறகு 2019ம் ஆண்டு பொங்கல் அன்று சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித், நயன்தாரா ஜோடியின் மகளாக நடித்து அட்டகாசமான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருப்பார்.
கதாநாயகி அவதாரம்
அதன் பிறகு புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் உள்ளிட்ட படங்களில் நடித்து கதா நாயகியாக அவதாரம் எடுத்தார். தற்போது தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அனிகா அதிகமான கவர்ச்சியான பாத்திரங்களில் நடிப்பதாகவும், கவர்ச்சியான போட்டோ ஷூட்டுகளை எடுப்பதாகவும், தன்னை நயன்தாரா போல கருதி கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
என்ன உடை அணிந்தாலும் தவறாகத்தான் பேசுகிறார்கள்
இது குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அனிகா கூறியதாவது. நான் சேலை அணிந்து புகைப்படம் வெளியிட்டால் நயன்தாரா போல் இருப்பதாக கமெண்ட் செய்கிறார்கள். நான் எந்த மேக்கப் போட்டாலும் நயன்தாரா மாதிரி இருக்கிறது என்கிறார்கள். நான் வேண்டும் என்றே அப்படி செய்யவில்லை. இயல்பாக நடக்கும் காரியத்தை நான் வேண்டும் என்றே செய்வது போல சித்தரிக்கிறார்கள். என்னை போலவே திரைத்துறையில் இருக்கும் மற்ற பெண்களும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்கிறார்கள். கவர்ச்சியாக உடை அணிவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனக்கு ஸ்டைலாக இருக்க பிடித்திருக்கிறது. ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்கிறார்கள். என்ன உடை அணிந்தாலும் தவறாகத்தான் பேசுகிறார்கள் அதனால் தற்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிடுவதையே நிறுத்திவிட்டேன் என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.