சினிமாவெள்ளித்திரை

நடிகை மீரா நந்தனுக்கு கெட்டி மேளம்

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை மீரா நந்தன். சீரியல் நடிகையாக இருந்து பின்னர் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் மலையாளத்தில் 2007-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘வீடு’ என்கிற தொடரில் தான் முதன் முதலாக அறிமுகமானார். இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு மலையாள படமான ‘முல்லா’ படத்தில் நடித்தார்.

பின்னர், 2009ஆம் ஆண்டு வெளிவந்த ‘வால்மீகி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் ஆதியுடன் இணைந்து ‘அய்யனார்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஆத்தாடி ஆத்தாடி பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே போல படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்து. இதன்பின்னர் சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மீரா நந்தன் கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஜெஸ்னா’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை மீரா நந்தனுக்கும் அவரின் காதலரான பியூ ஸ்ரீஜு என்பவருக்கும் இன்று காலை கேராளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு இளம் ஜோடியை வாழ்த்தினர்.

எளிய முறையில் நடந்த இந்த திருமண புகைப்படங்கள் x , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புதுமண தம்பதிக்கு தமிழ். மலையாளம் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related posts