போஸ்டர் வெளியிடு
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.
நாளை பிறந்தநாள் காணும் திரு @dhanushkraja மென்மேலும் பல உயரங்கள் தொட்டு, சிறப்போடு வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்நாளை மேலும் சிறப்பாக்க #NaaneVaruven திரைப்படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @saregamasouth #HBDDhanush pic.twitter.com/DImpOtZE18
— Kalaippuli S Thanu (@theVcreations) July 27, 2022
