பேரணாம்பட்டு அம்மா உணவகத்தில் பணிக்கு வராத 5 சமையல் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பேரணாம்பட்டு அம்மா உணவகம்
பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினி பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு இயங்கி வரும் அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்தார். அங்கு சமைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள் சுகாதாரமான முறையில் தரமாக பொருட்கள் கொண்டு சமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணிபுரியும் 12 பணியாளர்களில் 7 நபர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். சமையல் பணியாளர்கள் முருகம்மா, நளினி, வசந்தி, லட்சுமி, ரம்யா ஆகிய 5 பணியாளர்கள் வரவில்லை கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையாளர் சுபாஷினி உத்தரவிட்டார். மேலும் பேரணாம்பட்டு , பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் என மொத்தம் 25ம் மேற்பட்ட கடைகளில் நகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து பிளாஸ்டிக் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினார். அவருடன் நகராட்சி துப்புறவு ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கள ஆய்வு உடனிருந்தனர்.

