சமூகம் - வாழ்க்கை

சுயமுன்னேற்றத்துக்கு உதவும் 5 பழக்கவழக்கங்கள்

சுயமுன்னேற்றம் என்பது தன்னை தானே மேப்படுத்தி வாழ்வில் முன்னேறுவது. அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள் நம்மை வாழ்வில் முன்னேற்றும். அந்த பலவழக்கங்கள் என்னவென்று இதில் பார்க்கலாம்.

1. அதிகாலை எழுதல் :

தினமும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் எழும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் நடத்தை, பழக்க வழக்கங்கள், மனநிலையில் மாற்றம் ஏற்படுவதை கன்கூட காண்பிர். இந்த பழக்கம் மூலம் காலையில் அதிக நேரம் கிடைக்கும். உடற்பயிற்சி, யோகா, வாக்கிங் போன்றவற்றைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

2. தியானம் :

தினமும் காலையிலோ, மாலையிலோ தியானம் செய்யும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். இது உங்கள் மனதை அமைதிப்படுத்துவதுடன், தேவையற்ற பதற்றம், மன அழுத்தம் போக்க உதவும். இது உங்களின் நியாபக சக்தியை அதிகப்படுத்தும். மனதை கட்டுப்படுத்தி ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த பெரும் உதவி புரியும்.

3. டைரி எழுதும் பழக்கம் :

நீங்கள் சந்தித்த சவால்கள், பிரச்சனைகள் அதனை நீங்கள் கடந்து வந்த விதம் அல்லது அதில் வெற்றி பெற்றது பற்றி ஒரு டைரியில் எழுதலாம். இது நீங்கள் உங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதை பற்றியும், ஒரு விழிப்புணர்வும் ஏற்படுத்தும்.

4. புத்தகம் வாசித்தல் :

நீங்கள் எந்தளவுக்கு புத்தகங்கள் வசிக்கிறீர்களா அந்த அளவுக்கு வாழ்வில் கற்று கொள்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் ஆர்வத்தை தூண்டுகிற புத்தகத்தை வாசியுங்கள். புத்தகங்கள் பேச்சாற்றலை வளர்ப்பதுடன், அறிவை பெருக்கும்.

5. இரவில் சீக்கிரமாக உறங்குவது :

அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர்கள் இரவில் சீக்கிரமாக உறங்க வேண்டும். இரவில் வெகுநேரம் சமூக வலைதளங்களில் செலவிட்டு, உடல் நலத்தை கெடுத்துக்கொள்ள கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் உறங்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.